ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலத்தை ஊருக்காக வழங்கிய ரத்தினம்மா
28 Feb 2026, 2:29 pm
<p><strong>ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலத்தை ஊருக்காக வழங்கிய ரத்தினம்மா</strong></p>
<p>கிருஷ்ணகிரி,பிப்.28 – கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், காமன்தொட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளையக்கொத்தூரைச் சேர்ந்த மறைந்த நாராயணப்பா, தனது நிலத்தை கிராம வளர்ச்சிக்காகத் தானமாக வழங்க வேண்டும் என 30 ஆண்டுகளுக்கு முன்பே தனது மனைவி ரத்தினம்மாவிடம் கூறியிருந்தார். இந்நிலையில், அப்பகுதியில் சமுதாயக் கூடம் அமைக்க அதிகாரிகள் இடம் தேடி வந்தபோது, தனது கணவருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள 5 சென்ட் நிலத்தை ரத்தினம்மா மற்றும் அவரது மகன்கள் சூளகிரி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்குத் தானமாக எழுதிக் கொடுத்தனர். சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான இந்த நிலத்தில், தற்போது ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் கட்டுவதற்கான பணிகளுக்கு ரத்தி னம்மா முன்னிலையிலேயே அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர், திமுக சூளகிரி வடக்கு ஒன்றியச் செயலாளர் நாகேஷ், மாநிலத் துணைச் செயலாளர் சீனிவாசன் மற்றும் ஒன்றியச் செயலாளர் முனிவெங்கடசாமி ஆகியோர் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தனர். தனது கணவரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்த ரத்தினம்மா மற்றும் அவரது வாரிசுகளைப் பிள்ளையக்கொத்தூர் கிராம மக்கள் பாராட்டி கவுரவித்தனர்.</p>
