முந்தய பக்கம்

20 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு; இடையூறாக இருந்த சுற்றுச்சுவர் அகற்றம்

17 Jun 2026, 10:12 pm
20 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு; இடையூறாக இருந்த சுற்றுச்சுவர் அகற்றம்
<p><strong>20 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு; இடையூறாக இருந்த சுற்றுச்சுவர் அகற்றம்</strong></p><p>நாமக்கல், ஜூன் 17- ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்த 100 அடி நீள கருங்கல் சுற்றுச் சுவர் இடித்து அகற்றப்பட்டதை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர். பழைய நீதிமன்ற வளாகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த இந்த சுற்றுச்சுவர் கார ணமாக பேருந்துகள் மற்றும் கனரக வாகனங் கள் திரும்புவதில் சிரமம் ஏற்பட்டதுடன், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்து களும் ஏற்படுகிறது. இதனால் சுவரை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த 20 ஆண்டுக ளாக பல்வேறு போராட்டங்கள் மற்றும் மனுக் கள் மூலம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ராசிபுரம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் அமைச்சருமான லோகேஷ் தமிழ்ச்செல்வனிடம் மனு அளிக் கப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஜேசிபி இயந்திரம் மூலம் சுற்றுச்சுவரை அகற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram