குழாயில் திடீர் உடைப்பு: சாலையில் வழிந்தோடிய குடிநீர்!
yesterday
<p><strong>குழாயில் திடீர் உடைப்பு: சாலையில் வழிந்தோடிய குடிநீர்!</strong></p><p>நாமக்கல், ஜூன் 21- ராசிபுரத்தில் பிரதான சாலை வழியாக செல்லும் குழாயில் திடீரென உடைப்பு ஏற் பட்டதால், ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வழிந்தோடியது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி பகுதிகளுக்கு புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரு கிறது. நகரில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி கள் அதிகளவில் உள்ளதால், குழாய்களில் தண்ணீரின் அழுத்தம் மிக அதிகமாக இருக் கிறது. இதன் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் குழாய்கள் அவ்வப் போது உடைந்து குடிநீர் வீணாவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக பழைய பேருந்து நிறுத்தம், ஆட்டோ நிறுத்தம் அருகே உள்ள கேட்வால்வு பகுதியில் அடிக்கடி கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வந்தது. இதனை நகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது சரி செய்து வந்தனர். இந்நிலையில், ராசிபுரம் - சேலம் சாலையில், பூக்கடை வீதிக்கு செல் லும் பகுதிக்கு முன்பாக உள்ள பிரதான சாலையில் சனியன்று மாலை குறிப்பிட்ட ஒரு வார்டுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. குழாயில் அதிக அழுத்தம் இருந்ததால், தண் ணீர் ஊற்றுப்போல பீரிட்டு மேலெழும்பி சாலை முழுவதும் ஓடியது. இதனால் சுத்தி கரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான லிட்டர் குடி நீர் சாலைகளில் ஆறாக ஓடி வீணானது. இது குறித்து தகவலறிந்ததும் ராசிபுரம் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் உடனடியாக குடிநீர் விநியோகத்தை நிறுத்திவிட்டு, உடைந்த குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட னர்.</p>
