முந்தய பக்கம்

ராசிபுரத்தில் தீபாவளிக்கு பாதுகாப்பு தீவிரம்

28 Oct 2026, 12:36 am
ராசிபுரத்தில் தீபாவளிக்கு பாதுகாப்பு தீவிரம்

ராசிபுரத்தில் தீபாவளிக்கு பாதுகாப்பு தீவிரம்

நாமக்கல், அக்.27-ராசிபுரத்தில் தேர்த்திருவிழா மற்றும் தீபாவளி பண்டிகையொட்டி நகரின் கடைவீதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் பாதுகாப்பு தீவிரப்படுத்தியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நித்ய சுமங்கலிமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நவம்பர் 5 ஆம் தேதியும், தீபாவளி பண்டிகை நவம்பர் 8 ஆம்தேதியும் நடைபெறவுள்ளது. இதையொட்டி, நகரின் கடைவீதிகளில்பொதுமக்கள் கூட்டம்அதிகரித்து வருகிறது. பூக்கடை வீதி, பெரியகடைவீதி, சின்ன கடைவீதி உள்ளிட்ட முக்கிய வணிகப் பகுதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு போன்ற குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க ராசிபுரம் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, 3 முக்கிய கடைவீதிகளிலும் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இக்கோபுரங்களில் போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு,கூட்டத்தை கண்காணிக்கவும், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அப்பகுதி வணிகர்கள் கூறுகையில், பண்டிகை காலங்களில் கடைவீதிகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட இடமின்றிஅவதிப்படுகின்றனர். எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகன நிறுத்தத்தைமுறைப்படுத்தவும், முக்கிய வீதிகளுக்குள் வாகனங்கள் நுழைவதை தடுக்க தடுப்புகள் அமைத்து கண்காணிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram