பாளையக்காரர் காலத்து அரிய ‘குழிச்சிற்பம்’ கண்டெடுப்பு!
16 Jan 2026, 3:00 pm
<p><strong>பாளையக்காரர் காலத்து அரிய ‘குழிச்சிற்பம்’ கண்டெடுப்பு!</strong></p>
<p>உடுமலை, ஜன. 16- உடுமலைப்பேட்டை அடுத்த கணப திபாளையம், வெனசப்பட்டி அருகே உள்ள ‘மாலைக்கோயில்’ பகுதியில், தளி பாளையக்காரர் காலத்தைச் சேர்ந்த அரிய வகை நடுகற்கள் மற்றும் சிற்பங்களை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆவணப்படுத்தி யுள்ளனர். பொதுவாக திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி களில் கண்டறியப்படும் நடுகற்கள் அனைத்தும் ‘புடைப்புச் சிற்பங்களா கவே’ அமைந்திருக்கும். ஆனால், மாலைக்கோயில் பகுதியில் கண்டறி யப்பட்ட சிற்பம் இதற்கு மாறாக, கல் லின் உட்புறம் செதுக்கப்பட்ட ‘குழிச் சிற்ப’ முறையில் வடிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்றடி உயரமும், இரண்டடி அகலமும் கொண்ட இந்தச் சிற்பத்தில், கம்பீரமான ஒரு ஆண் உருவம் தலைப் பாகையுடன் காட்சியளிக்கிறது. இதன் அருகிலேயே வழிபாட்டு நிலையில் ஒரு ஆண் மற்றும் பெண் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதி மக்கள் இதனை ‘எட்டப்ப நாயக்கர்’ அல்லது ‘எத்திலப்ப நாயக்கர்’ என்று அழைத்து வழிபட்டு வருகின்றனர். வழக்கமாக வீர மரணம் அடைந்த வர்களுக்கு எழுப்பப்படும் நடுகற்களை விட, இங்குள்ள அமைப்பு மாறுபட்டுள் ளது. இங்கு காளை மாடு பொறித்த சிற் பங்கள், தலைவன்-தலைவி வழிபடும் காட்சிகள் மற்றும் அரசன், தளபதி போன்ற உயர் நிலையில் உள்ளவர்க ளின் சிற்பங்கள் காணப்படுகின்றன. போரில் வீரமரணம் அடைந்த வீரர்க ளுக்கு ‘வீரக்கற்கள்’ எடுப்பது வழக்கம். ஆனால், ஒரு நாட்டின் தலைவனுக்கோ அல்லது அரசனுக்கோ எடுக்கப்படும் நினைவிடங்கள் ‘மாலைக்கோயில்’ என்று அழைக்கப்படுவதாக ஆய்வாளர் கள் கருதுகின்றனர். மெட்ராத்தி, எலையமுத்தூர், பண் ணைக்கிணறு, புதுப்பாளையம் போன்ற பகுதிகளில் ஏற்கனவே கண்டறி யப்பட்ட நடுகற்களில் சிவனிய மற்றும் வைணவச் சின்னங்கள் காணப்படுகின் றன. ஆனால், மாலைக்கோயிலில் உள்ள சிற்பங்கள் தளி பாளையப் பட்டை ஆட்சி செய்த புகழ்பெற்ற எத்த லப்ப நாயக்கர் காலத்து வரலாற்று எச் சங்களாக இருக்கலாம் எனத் தெரிகி றது. இது குறித்து வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கூறுகையில்: “மைவாடி, ஜோத்தம்பட்டி போன்ற இடங்களில் உள்ள நடுகற்கள் போரில் இறந்த வீரர்களுக்காக எடுக்கப்பட் டவை. ஆனால், மாலைக்கோயிலில் உள்ள சிற்பங்கள் ஒரு அரச வம்சத்தின் அல்லது பாளையக்காரர் ஆட்சியின் அதிகாரத்தையும், அவர்களின் வாழ்வி யலையும் பறைசாற்றுகின்றன. இவை தளி பாளையக்காரர்களின் தொல்லி யல் எச்சங்கள் என்பதற்குச் சான்றாக உள்ளன,” எனத் தெரிவித்தனர். தற்போது இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான சிற்பங்கள் போதிய பராமரிப்பின்றிச் சிதிலமடைந்து காணப் படுகின்றன. ஒரு சில சிற்பங்கள் மட்டுமே மக்கள் வழிபாட்டில் உள்ளன. முன் னோர்களின் வீரத்தையும், கொங்கு மண்ணின் வரலாற்றையும் சுமந்து நிற் கும் இத்தகைய அரிய வரலாற்றுச் சின் னங்களைப் பாதுகாக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பதே வர லாற்று ஆர்வலர்களின் கோரிக்கை யாக உள்ளது. இந்தக் கள ஆய்வில் உடுமலை வர லாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் வி. கே.சிவகுமார்.அருட்செல்வன் ஆகியோ ருடன் பேராசிரியர் ஜெய்சிங் இருந்தார் கள்.</p>
