மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று வாக்குப் பதிவு!
5 Oct 2026, 11:22 pm

மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று வாக்குப் பதிவு!

சென்னை, அக். 5 -தமிழகத்தின் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (அக். 6) நடைபெறுகிறது.

காலை 7 மணிக்குத் துவங்கும் இந்த வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்த 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.

ஆதார் அட்டை, ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, இந்தியக் கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், அரசு அல்லது பொதுத்துறை நிறுவனப் பணி அடையாள அட்டை, எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் அதிகாரப்பூர்வ அடையாள அட்டை, தனித்துவ மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (யூடிஐடி) உள்ளிட்டவை அடையாளத்திற்கான மாற்று ஆவணங்கள் ஆகும். வாக்காளர் உதவி எண் 1950-ஐத் தொடர்புகொண்டும் இதுதொடர்பான விவரங்களைப் பெறலாம்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளும் தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில், துணை ராணுவத்தினர் மற்றும் 6,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, வாக்குப்பதிவு முழுவதும் வீடியோ பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள்

மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி. சுகந்தி, தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத் உட்பட 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தாராபுரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ப. லட்சுமணன், தவெக வேட்பாளர் சத்யபாமா, திமுக வேட்பாளர் சுகன்யா, அதிமுக வேட்பாளர் பானுமதி உட்பட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.