தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக் கோரி விரைவு போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

8 Jan 2026, 2:44 pm
பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக் கோரி விரைவு போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
<p><strong>பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக் கோரி விரைவு போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்</strong></p> <p>சென்னை, ஜன. 8 - தங்களின் நீண்டகால கோரிக் கைளை நிறைவேற்றக் கோரி,அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தொழி லாளர்கள், புதன்கிழமை (ஜன.7) அன்று, சென்னை பல்லவன் சாலையில் &nbsp;3 நாள் காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர். சங்கத்தின் மாநிலத் தலைவர் &nbsp;டபிள்யு.ஐ. அருள்தாஸ் தலைமையி லான இந்தப் போராட்டத்தை சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சம்மே ளன மாநிலத் தலைவர் பா. பால கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத் தின் பொதுச்செயலாளர் வி. தயா னந்தம், சங்கத்தின் பொதுச் செயலா ளர் எம். கனகராஜ், பொருளாளர் பி. &nbsp;சிங்காரவேலு உள்ளிட்டோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். போராட்டத்தின்போது, தமிழ் நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம் மேளனத்தின் மாநிலப் பொதுச்செய லாளர் கே. ஆறுமுகநயினார் செய்தி யாளர்களிடம் பேசினார். &ldquo;விரைவுப் போக்குவரத்துக் கழ கம், நீண்ட தூரம் பயணம் செய்யும் &nbsp;பேருந்துகளை இயக்குகிறது. பெரும் பகுதி மக்கள் கழகப் பேருந்துகளையே பயன்படுத்துகின்றனர். ஆனால், விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைப் பராமரிக்க தேவை யான பணியாளர்கள் இல்லை. 26 &nbsp;ஆண்டுகளாக பணியாளர் நிய மனமே நடைபெறாமல் உள்ளது. 800- க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்க &nbsp;வேண்டிய இடத்தில், 250 பேர் தான் உள்ளனர். பேருந்து உதிரி பாகங்களை புதுப் பிக்கும் பிரிவை மூடிவிட்டதால், வெளி முகமை மூலம் புதுப்பித்து வாங்கும் பொருட்கள் தரமற்றவையாக உள்ளன. &nbsp;டயர் ரீட்ரேட்-க்கு கிலோ ரப்பர் 240 &nbsp;ரூபாய்க்கு வாங்கப்பட்டது. தற்போது 140 ரூபாய்க்கு தரமற்ற ரப்பர் வாங்கு வதால், டயர் விரைந்து பழுதடைகிறது. அண்மையில், திட்டக்குடி அருகே &nbsp;நடந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த னர். டயர் வெடித்தது தான் அதற்கு முக்கிய காரணம். எனவே, பேருந்து பரா மரிப்பை அரசு முறைப்படுத்த வேண் டும். போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். தேவையான உதிரி பாகங் கள் வாங்கி கொடுக்க வேண்டும். இதனை செய்வதற்கு மாறாக, நிர்வாகம் தொழிலாளர்கள் மீது பழி &nbsp;சுமத்தி தேவையற்ற தண்டனை வழங்குவதை கைவிட வேண்டும். போக்குவரத்துக் கழகங்களை மேம் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே 3 நாள் காத்திருப்பு போராட்டத்தை சிஐடியு &nbsp;நடத்துகிறது&rdquo; என்று கே. ஆறுமுக நயி னார் கூறினார். செய்தியாளரின் கேள்வி ஒன்றக்குப் &nbsp;பதிலளித்த அவர், டயர் மாட்டுவதற்கு புதிய போல்ட் வாங்காமல், பழைய &nbsp;கடைகளில் வாங்கி வந்து மாட்டு கிறார்கள். இந்த பிரச்சனை சமீப கால மாக அதிகரித்துள்ளது என்றும் குறிப் பிட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.