சபரிமலையில் பாதுகாப்பு அளிக்க விரைவு அதிரடிப் படை
22 Nov 2025, 4:09 pm
<p><strong>சபரிமலையில் பாதுகாப்பு அளிக்க விரைவு அதிரடிப் படை</strong></p>
<p>சபரிமலையில் ஐயப்ப பக்தர்க ளுக்கு பாதுகாப்பு அளிக்க 140 பேர் கொண்ட விரைவு அதிரடிப் படை (RAF) குழு சபரிமலைக்கு வந்துள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த துணை தளபதி பிஜு ராம் தலைமையிலான இக்குழு சனிக்கிழ மையன்று சபரிமலை சன்னிதானத்தில் பொறுப்பேற்றது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கோயம்புத்தூர் அடிப்படை முகாமிலிருந்து இக்குழு சபரிமலைக்கு வந்துள்ளது. அவர்கள் தற்போது சன்னிதானம் மற்றும் மரக்கூட்டத்தில் மூன்று ஷிப்டு களாக பணிபுரிகின்றனர். ஒரு ஷிப்டில் 32 பேர் இருப்பார்கள். கூடுதலாக, அவசரநிலைகளைச் சமாளிக்க 10 பேர் கொண்ட விரைவு அதிரடிப்படை 24 மணி நேரமும் பணியில் இருக்கும். மண்டல மகரவிளக்கு சீசன் முடியும் வரை இந்தக் குழு சபரிமலையில் இருக்கும். பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் கட்டுப்பாடு அவர்களின் முக்கியக் கடமைகள் என்றும், அவர்கள் காவல்துறையுடன் இணைந்து செயல் படுவார்கள் என்றும் துணைத் தளபதி கூறினார்.</p>
