தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வடமாநில தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு ராணிப்பேட்டையில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

13 May 2026, 2:29 am
வடமாநில தொழிலாளர்  போராட்டத்திற்கு ஆதரவு ராணிப்பேட்டையில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>வடமாநில தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு ராணிப்பேட்டையில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p><strong> ஆர்ப்பாட்டம்</strong>தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தேசிய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. சிஐடியு மாவட்ட செயலாளர் ஆ. தவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வடமாநிலங்களில் தொழி லாளர்கள் எதிர்கொள்ளும் நீண்ட நேர வேலை, குறைந்த ஊதியம் மற்றும் அடிப்படை உரிமைகள் மறுப்பு போன்ற இன்னல்கள் குறித்து தலைவர்கள் கண்டனம் தெரி வித்தனர். கடந்த மூன்று மாதங்களாகப் போராடி வரும் 40,000 தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்ததோடு, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. குறைந்தபட்ச ஊதியமாக 26,000 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் மற்றும் தொழி லாளர் நலன்களுக்கு எதிரான புதிய சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கியக் கோரிக்கை கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப் பட்டன. இதில் சிஐடியு மாவட்ட பொரு ளாளர் என். ரமேஷ், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஏ.எஸ். சங்கர் மேஸ்திரி மற்றும் பல தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்வின் நிறைவில் ஏஐடியுசி மாவட்ட துணை செயலாளர் ஜி. பாலு நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.