முந்தய பக்கம்

‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் விழிப்புணர்வு

6 Jul 2026, 11:49 pm
‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் விழிப்புணர்வு
<p><strong>‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் விழிப்புணர்வு</strong> </p><p>ராணிப்பேட்டை, ஜூலை 6- ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படையினர் பேருந்து நிலையங்கள் மற்றும் திமிரி அருகேயுள்ள பழங்குடியினர் கிராமங்களில் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் இணையவழி மோசடிகளைத் தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அவசர உதவிக்கு 1091 (பெண்கள் உதவி) மற்றும் 1930 (சைபர் குற்றங்கள்) ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. காவல்துறை எடுத்து வரும் இந்த முயற்சிகளை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram