ஜூலை 17-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
3 hours before
<p><strong>ஜூலை 17-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்</strong> </p><p>ராணிப்பேட்டை, ஜூலை 13- ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் ஜூலை 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குச் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளன. 8-ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் மற்றும் பி.இ. வரை கல்வித்தகுதி கொண்டவர்கள், தங்களது கல்விச் சான்றிதழ்களுடன் இம்முகாமில் பங்கேற்கலாம். தனியார் நிறுவனங்களில் பணி கிடைத்தாலும், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்ய வேண்டும். இதற்காகப் பான் கார்டு, ஜிஎஸ்டி சான்றிதழ், நிறுவனச் சான்றிதழ் மற்றும் ஆதார் ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகிப் பதிவு செய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு ranipetjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 04172-291400 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். தகுதியுள்ள இளைஞர்களும், தனியார் நிறுவனங்களும் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>
