தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகள்: ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் அவதி!

25 May 2026, 2:22 am
நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகள்:  ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் அவதி!

நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகள்: ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் அவதி!

​​​​​​​ராணிப்பேட்டை, மே 24- தமிழகத்தின் நெற்களஞ்சியப் பகுதி களில் ஒன்றான ராணிப்பேட்டை மாவட் டத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மலிந்து கிடக்கும் லஞ்சமும் நிர்வாகக் குளறுபடி களும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன.

மூட்டைக்கு ரூ.45 கட்டாய லஞ்சம் நேரடி நெல் கொள்முதல் நிலையங் களில் நெல் விற்பனை செய்யும் ஏழை, நடுத்தர விவசாயிகளிடம் ஒவ்வொரு நெல் மூட்டைக்கும் தலா ரூ.45 வீதம் கட்டாய மாகக் கையூட்டு பெறப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இந்தத் தொகை யைக் கொடுத்தால் மட்டுமே நெல் கொள் முதல் செய்யப்படும் என்ற எழுதப்படாத விதி தடையின்றி அரங்கேறி வருகிறது.

டோக்கன் முறைகேடும் மழையில் வீணாகும் நெல்லும் நெல் கொள்முதலை முறைப்படுத்தக் கொண்டு வரப்பட்ட டோக்கன் முறையில் பெரும் முன்னுரிமை மீறல்கள் நடக்கின் றன.

அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் சிலரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, வரி சையை மீறி நெல்லைக் கொள்முதல் செய்கி ன்றனர்.

இதனால் நேர்மையாக டோக்கன் பெற்று வரிசையில் காத்திருக்கும் சாதாரண விவசாயிகள் பல மாதங்களாகக் காத்துக் கிடக்கும் அவல நிலை நீடிக்கிறது.

மேலும், பல நிலையங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், திறந்தவெளிகளில் நெல் மூட்டைகள் வைக்க ப்பட்டுள்ளன.

தற்போதைய மழைக்காலத் தில் நெல் மூட்டைகள் நனைந்து முளைத்து விட்டால் தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்திற்கு யார் பொறுப்பு என்று விவசா யிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது குறித்துக் கேட்டால், “நெல்லை நிரப்பப் போதிய சாக்குப்பைகள் இல்லை” என்று அதிகாரிகள் அலட்சியமாகப் பதிலளிப்ப தாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கோரிக்கைகள் விளைவித்த நெல்லை அரசு நிர்ணயித்த விலைக்கு விற்கக் கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலையை மாற்றி, மூட்டைக்கு ரூ.45 வாங்கும் முறைகேட்டிற்குப் புதிய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

டோக்கன் வழங்கும் முறையை முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைன் மூலமாக முறைப்படுத்த வேண்டும்.

கொள் முதல் நிலையங்களில் போதிய சாக்குப்பை களை இருப்பு வைப்பதோடு, மழையிலி ருந்து நெல்லைப் பாதுகாக்க முறையான தார்ப்பாய்கள் மற்றும் சேமிப்புக் கிடங்கு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகாவது தங்களின் நீண்ட நாள் வேதனைக்கு விடிவுகாலம் பிறக்குமா என்று ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.