முந்தய பக்கம்

ராணிப்பேட்டை: ஏழை முஸ்லிம் மகளிர் வாழ்வாதாரத்திற்கு நன்கொடை

9 Jul 2026, 11:26 pm
ராணிப்பேட்டை: ஏழை முஸ்லிம் மகளிர் வாழ்வாதாரத்திற்கு நன்கொடை
<p><strong>ராணிப்பேட்டை: ஏழை முஸ்லிம் மகளிர் வாழ்வாதாரத்திற்கு நன்கொடை</strong></p><p>ராணிப்பேட்டை, ஜூலை 9 – ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏழை முஸ்லிம் மகளிர் சுயதொழில் தொடங்கவும், தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் ரூ. 4 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நவல்பூர் இஸ்லாமிக் வெல்பர் அசோசியேஷன் சார்பில் ரூ. 1 லட்சமும், ராணிப்பேட்டை எக்னாமிக் சேம்பர் சார்பில் ரூ. 3 லட்சமும் என மொத்தம் ரூ. 4 லட்சம் நன்கொடை திரட்டப் பட்டது. இந்தத் தொகைக்கான காசோலையை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தினர் மாவட்ட ஆட்சி யர் ந.ப்ரியா ரவிச்சந்திரனிடம் நேரில் வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் த.மீனா, சங்கச் செயலாளர் அப்துல்லா, இணைச் செயலாளர் கே.ஹயாத் பாஷா மற்றும் கண்காணிப்பாளர் அ.ஷம்ஷாத் ஆகி யோர் உடனிருந்தனர். இந்த உதவி அப்பகுதி மகளிரின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெரிதும் உறுதுணை யாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram