முந்தய பக்கம்

கொள்முதல் நிலையத்தில் 10 ஆயிரம் நெல் மூட்டை தேக்கம் விவசாயிகள் முற்றுகை

19 May 2026, 1:10 am
கொள்முதல் நிலையத்தில்  10 ஆயிரம் நெல் மூட்டை தேக்கம்  விவசாயிகள் முற்றுகை
<p><strong>கொள்முதல் நிலையத்தில் 10 ஆயிரம் நெல் மூட்டை தேக்கம் விவசாயிகள் முற்றுகை</strong></p><p>ராணிப்பேட்டை, மே 18- ஆற்காடு அருகே உள்ள ஆயிலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து, விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்தும், டோக்கன் முறையைப் பின்பற்றாமல் மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை லஞ்சம் வாங்கிக்கொண்டு நெல் கொள்முதல் செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் தேங்கிக் கிடப்பதால், மழையில் நனைந்து முளைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போதிய சாக்குப்பைகள் இல்லை என அதிகாரிகள் அலட்சியமாகப் பதிலளித்ததால் ஆத்திரமடைந்த விவசாயி கள், மாவட்ட உயர் அதிகாரிகள் நேரில் வந்து உறுதியளிக்கும் வரை போராட்ட த்தைக் கைவிடப் போவதில்லை எனக் கூறி முற்றுகையைத் தொடர்ந்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram