விவசாயிகள் திடீர் சாலை மறியல் நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு புகார்
5 Jun 2026, 4:07 am
<p><strong>விவசாயிகள் திடீர் சாலை மறியல் நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு புகார்</strong></p><p>ராணிப்பேட்டை, ஜூன் 4- ஆற்காடு அருகே லாடாவரம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழி யர்கள் லஞ்சம் கேட்பதாகவும், கூடுதல் எடை பிடித்தம் செய்வதாகவும் கூறி அப்பகுதி விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லாடாவரம் கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளைக் கொண்டு வந்த விவ சாயிகளிடம், அங்குள்ள ஊழியர்கள் ஒரு மூட்டைக்கு நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 3 கிலோ கூடுதலாகப் பிடித்தம் செய்ததோடு, மூட்டைக்கு ரூ. 40 வீதம் லஞ்சம் கோரியதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தச் சுரண்டலால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நடத்திய திடீர் சாலை மறியலால் அப்பகுதி யில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த ஆற்காடு கிராம போலீசார், வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி எவ்வித முறைகேடும் இன்றி நெல் மூட்டைகள் முறையாக அளக்கப்படும் எனத் திட்டவட்டமாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.</p>
