ஊரக வளர்ச்சி முகமை புதிய திட்ட இயக்குநர் பொறுப்பேற்பு
4 Jul 2026, 4:14 am
<p><strong>ஊரக வளர்ச்சி முகமை புதிய திட்ட இயக்குநர் பொறுப்பேற்பு</strong></p><p>ராணிப்பேட்டை, ஜூலை 3- ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் புதிய திட்ட இயக்குநராக எஸ். செல்வராணி வியாழக் கிழமை (ஜூலை 2) பொறுப் பேற்றுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அவர் தனது பணிகளைத் தொடங்கினார். புதிய திட்ட இயக்குநர் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முகமை அலு வலகத்தின் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் அவருக்கு நேரில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பொறுப்பேற்ற கையோடு, மாவட்டத்தில் தற்போது செயல் படுத்தப்பட்டு வரும் ஊரக வளர்ச்சித் திட்டங் கள் மற்றும் வருங்காலத் திட்டங்கள் குறித்துத் துறை சார்ந்த அதிகாரிகளு டன் எஸ்.செல்வராணி முதற்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டார்.</p>
