மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவித்தொகை வயது தளர்வு குறித்த ஆலோசனை
3 Jul 2026, 11:31 pm
<p><strong>மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவித்தொகை வயது தளர்வு குறித்த ஆலோசனை</strong></p><p>ராணிப்பேட்டை, ஜூலை 3- ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதில் உள்ள வயது தளர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 2) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ந. ப்ரியா ரவிச்சந்திரன் தலைமை தாங்கி இக்கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில், தகுதியுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவித்தொகை தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும், அதற்கான வயது தளர்வு நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளி குழந்தை ஒருவருக்கு ரூ. 18,500 மதிப்பீட்டிலான சக்கர நாற்காலியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சி. பேபி இந்திரா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் கீதாலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, மாவட்ட சமூக நலன் அலுவலர் பாலசரஸ்வதி உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.</p>
