ராணிப்பேட்டை மாவட்டக் குழு சார்பில் ‘தீக்கதிர்’ நாளிதழுக்கு 70 சந்தாக்கள் ஒப்படைப்பு!
7 Aug 2026, 11:45 pm

ராணிப்பேட்டை மாவட்டக் குழு சார்பில் ‘தீக்கதிர்’ நாளிதழுக்கு 70 சந்தாக்கள் ஒப்படைப்பு!

ராணிப்பேட்டை, ஆக. 7 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணிப்பேட்டை மாவட்டக் குழு சார்பில், மத்திய - மாநில கமிட்டி முடிவுகள் விளக்கும் கூட்டம் மற்றும் ‘தீக்கதிர்’நாளிதழ் சந்தா வழங்கும் நிகழ்ச்சி ஆற்காட்டில் உள்ள ஜன சங்க கட்டி டத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.ரகுபதி தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில், கட்சியின் முக்கிய முடிவுகள் குறித்து தலைவர்கள் உரை யாற்றினர். மத்தியக் குழுவின் முடிவுகள் மற்றும் முக்கியத் தீர்மானங்கள் குறித்து மாநிலக் குழு உறுப்பினர் கே. ஆறுமுக நயினார் விரிவாக விளக்கமளித்தார்.

தொடர்ந்து, மாநிலக் குழு முடிவு கள் மற்றும் ‘தீக்கதிர்’ நாளிதழின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநிலக் குழு உறுப்பினரும், சென்னை பதிப்பு ‘தீக்கதிர்’ மேலாளருமான எம். சிவகுமார் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.காசிநாதன் தலைமையில், தீக்கதிர் நாளிதழுக்கான 70 புதிய சந்தாக்கள் திரட்டப்பட்டு, மாநிலக் குழு உறுப்பினர் கே. ஆறுமுக நயினார் முன்னி லையில் சென்னை பதிப்பு மேலாளர் எம். சிவகுமாரிடம் முறைப்படி வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிகண்டன் இடைக்கமிட்டி செயலாளர்கள் எஸ். கிட்டு, ஜி. மதியழகன், மாவட்டக் குழு உறுப்பி னர் ஏ.பி.எம். சீனிவாசன் உள்ளிட்ட திரளான

நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.