அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆட்சியர் ந.ப்ரியா ஆய்வு
12 Jun 2026, 10:33 pm
<p><strong>அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆட்சியர் ந.ப்ரியா ஆய்வு</strong></p><p>ராணிப்பேட்டை, ஜூன் 12- அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேசிய வேளாண் சந்தை திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா நேரில் ஆய்வு செய்தார். ஆன்லைன் வர்த்தகம் மற்றும் விவசாயிகளுக்கான பணப்பட்டுவாடா குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், அங்கிருந்த விவசாயிகளிடமும் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, அறுவடை கால விலை வீழ்ச்சி மற்றும் இடுபொருட்கள் விலை உயர்வு குறித்து கவலை தெரிவித்த விவசாயிகள், மானிய விலையில் உரங்கள் கிடைக்க வழிவகை செய்யுமாறு கோரினர். அதற்கு, விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி மானிய உரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சே.இராமமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>
