தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நிலுவை பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களை ‘கருப்பு பட்டியலில்’ சேர்க்க வேண்டும் ராணிப்பேட்டை ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

14 Jun 2026, 1:03 am
நிலுவை பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களை  ‘கருப்பு பட்டியலில்’ சேர்க்க வேண்டும்  ராணிப்பேட்டை ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

நிலுவை பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களை ‘கருப்பு பட்டியலில்’ சேர்க்க வேண்டும் ராணிப்பேட்டை ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

நிலுவை பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களை ‘கருப்பு பட்டியலில்’ சேர்க்க வேண்டும் ராணிப்பேட்டை ஆட்சியர் அதிரடி நடவடிக்கை பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சனிக்கிழமை (ஜூன் 13) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மூன்று, நான்கு ஆண்டு களுக்கு மேலாக நிலுவை யில் உள்ள பணிகளை உடனடியாக முடிக்க உத்தரவிட்ட ஆட்சி யர், பணிகளைத் தாமதப் படுத்தும் ஒப்பந்ததாரர்க ளுக்கு அபராதம் விதிக்கவும், தொடர்ந்து அலட்சியம் காட்டினால் அவர்களை கருப்பு பட்டியலில் சேர்க்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாராஞ்சி நாற்றங்கால் பண்ணையில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 12 ஆயிரம் மரச் செடிகள் வளர்க்கப்படுவதை ஆய்வு செய்தார்.

மேலும், சஞ்சீவிபுரம் பகுதியில் 1 ஏக்கர் நிலத்தில் 500 மரச் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்படுவதையும் பார்வையிட்டார்.

இருளர் இன மக்க ளுக்காக பிஎம் ஜென்மன் திட்டத்தில் கட்டப்படும் 10 வீடுகளின் பணிகளை ஆய்வு செய்து, இம்மாத இறுதிக்குள் முடிக்க உத்தர விட்டார்.

அதேபோல், நந்தி வேடுதாங்கல் பகுதியில் பல ஆண்டுகளாகக் கட்டப்படாமல் நிலுவையில் உள்ள வீடுகளை ரத்து செய்ய அறிவுறுத்தினார்.

பாராஞ்சி ஊராட்சியில் ரூ.9.87 இலட்சம் மதிப்பில் 125 பணியாளர்கள் மூலம் நீர்வரத்து கால்வாய் தூர்வாரும் பணிகள் நடை பெறுவதைக் கண்காணித்து ஆய்வு செய்தார்.

பாராஞ்சி பெரிய மோட்டூர் கிராமத்தில் ரூ.5.68 இலட்சம் மதிப்பில் அமைக்கப்படும் பேவர் பிளாக் சாலைப் பணிகளையும், கும்மினிப் பேட்டை அரசு பள்ளி வளாகத்தில் தாமதமாகி வரும் அங்கன்வாடி மையக் கட்டுமானப் பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

மாவட்டம் முழுவதும் 3 முதல் 4 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கும் பணிகளைப் பட்டியலிட்டு, முறையான காரணம் இன்றி காலதாமதம் செய்யும் ஒப்பந்த தாரர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார்.

ஒரே ஒப்பந்ததாரர் பல பணி களை நிலுவையில் வைத்திருந்தால், அவர்க ளைக் கருப்பு பட்டிய லில் சேர்க்குமாறு திட்ட இயக்குநருக்கு அறி வுறுத்தினார். அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும், பொறியாளர்களும் நிலுவைப் பணிகளை உடனடியாக விரைவுபடுத்த வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது.

இவாய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கு.செல்வ ராசு, ஒன்றியக் குழு தலை வர் நிர்மலா சௌந்தர், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் அன்பரசு, பாஷா மற்றும் உதவி செயற்பொறி யாளர் ஜெரால்டு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.