தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு !
15 Jun 2026, 12:43 am
<p><strong>தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு !</strong></p><p>ராணிப்பேட்டை,ஜூன்14- ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ந. ப்ரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள 92 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இந்த சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தற்பொழுது 64 தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கி வரு கின்றன. இந்தத் தொழிற் சாலைகளில் இருந்து வெளி யேறும் தோல் கழிவுநீர், சுத்திகரிப்பு நிலையத்தில் முழுமையாக சுத்தி கரிக்கப்பட்டு, மீண்டும் பயன் பன்படுத்தக் கூடிய நல்ல தண்ணீராக நிறுவ னங்களுக்கே அனுப்பி வைக்கப்படுகிறது. சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாடுகள் மூன்று கட்ட சுத்திகரிப்பு, நவீன தொழில் நுட்பம், மறுசுழற்சி மற்றும் உப்பாக மாற்றம் குறித்து அதன் மேலாளர் விரிவாக விளக்கினார். சுத்திகரிப்பு நிலை யத்தின் அனைத்துப் பகுதிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு கேட்டறிந்தார். அப்போது, தொழிற்சாலைகளில் இருந்து குழாய்கள் மூலம் பெறப்படும் கசடு நீர் முழுமையாக சுத்தி கரிக்கப்பட்டு, நீர் மற்றும் கசடுகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு முறை யாக மறுசுழற்சி செய்யப் படுவதால், இந்த நிலையம் ஒரு முன்மாதிரியாகச் செயல்பட்டு வருகிறது என்று சுத்திகரிப்பு நிலைய மேலாண்மை இயக்குனர் தெரிவித்தார். ஆய்வின் நிறைவாக, சுத்திகரிப்பு நிலைய வளா கத்தில் மாவட்ட ஆட்சியர் ந. ப்ரியா மரக்கன்றுகளை நட்டார். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் தொல்காப்பியன், சுத்தி கரிப்பு நிலைய மேலாண்மை இயக்குனர் ஜபருல்லா, தென்னிந்திய தோல் வியாபாரிகள் சங்கத் தலைவர் அப்துல் ஜமீல், சுத்திகரிப்பு நிலைய மேலாளர் சிவக்குமார், பொறியாளர்கள் ஆனந்த், சபரிநாதன், வட்டாட்சியர் நடராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனி ருந்தனர்.</p>
