தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

9 May 2026, 2:45 am
சென்னை விரைவு செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டம் பிளஸ்-2 தேர்வில் 88.20% தேர்ச்சி மாணவிகள் மீண்டும் சாதனை!

ராணிப்பேட்டை, மே 8- 2026-ஆம் ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஒட்டுமொத்தமாக 88.20 சதவீதத் தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மாநில அளவிலான தேர்ச்சிப் பட்டியலில் ராணிப்பேட்டை மாவட்டம் 37-வது இடத்தைப் பிடித்துள்ளது. இவ்வாண்டு பொதுத்தேர்வை மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலிருந்து மொத்தம் 13,285 மாணவ, மாணவியர்கள் எழுதினர். இதில் 11,718 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று வழக்கம் போல் சாதனை படைத்துள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 91.70 சதவீதமாகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 84.21 சதவீதமாகவும் உள்ளது. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை 84.29 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரக்கோணம் டாக்டர் வி.ஜி.என் (Dr. VGN) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கே. கௌதமி மற்றும் அரக்கோணம் பாரதிதாசனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் எஸ். ஹேமசந்திரன் ஆகியோர் தலா 591 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டனர். அரசுப் பள்ளிகள் அளவில் பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ. காவியா 580 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் ராணிப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் 15 தனியார் பள்ளிகள் என மொத்தம் 16 பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளன. இருப்பினும், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்திலும் மாநில அளவில் ராணிப்பேட்டை மாவட்டம் 37-வது இடத்தையே பெற்றுள்ளது. தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மற்றும் மாவட்ட அளவில் முன்னிலை பெற்ற மாணவ, மாணவியர்களைப் பாராட்டி, மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் பிளஸ்-2 தேர்வில் 93.25% தேர்ச்சி மாநில அளவில் 31-வது இடம்

செங்கல்பட்டு, மே 8 தமிழகத்தில் வெளியாகியுள்ள பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளின்படி, செங்கல்பட்டு மாவட்டம் ஒட்டுமொத்தமாக 93.25 சதவீதத் தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் மாநில அளவிலான தரவரிசையில் மாவட்டம் 31-வது இடத்தைப் பிடித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு, நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 239 பள்ளிகளைச் சேர்ந்த 29,195 மாணவ, மாணவிகள் இத்தேர்வினை எழுதினர். இதில் 27,223 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 90.48 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.70 சதவீதமாகவும் உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 57 பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளன. கடந்த ஆண்டு 94.29 சதவீதத் தேர்ச்சியுடன் மாநில அளவில் 28-வது இடத்தில் இருந்த செங்கல்பட்டு மாவட்டம், இவ்வாண்டு தேர்ச்சி விகிதத்தில் சற்று சரிவைச் சந்தித்து 31-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 81 அரசு, நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளில் இருந்து 12,240 பேர் தேர்வு எழுதியதில், 10,748 பேர் (87.81%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பாலூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மற்றும் செங்கல்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு அரசுப் பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்: 21 பள்ளிகளில் இருந்து 4,262 பேர் தேர்வு எழுதியதில் 4,035 பேர் (94.67%) தேர்ச்சி பெற்றனர். தாம்பரம் மெட்ராஸ் சேவா சதன், செங்கல்பட்டு ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் மற்றும் சி.எஸ்.ஐ அலிசன் காசி ஆகிய 3 பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. மெட்ரிக் மற்றும் சுயநிதிப் பள்ளிகள்: 137 தனியார் பள்ளிகளில் இருந்து 12,526 பேர் தேர்வு எழுதியதில் 12,275 பேர் (97.99%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பிரிவில் அதிகபட்சமாக 52 பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பலி? மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை

திருவள்ளூர், மே 8- வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி (35), திருமணமான 8 ஆண்டுகளுக்குப் பிறகு கருவுற்று, சென்னை ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் கவனக்குறைவாகக் குடலைத் துண்டித்ததால், அவருக்குத் தொற்று ஏற்பட்டு வயிறு வீங்கியதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் தமிழ்ச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை தீவிர சிகிச்சையில் உள்ளது. உயிரிழப்பை மறைக்க முயன்ற மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவும் கோரி உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரில் மீனவர் படகுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

கடலூர், மே 8- கடலூர் அருகே தாழங்குடா மீனவ கிராமத்தில் கடற்கரை யோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவரின் பைபர் படகுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாழங்குடாவைச் சேர்ந்த சுகுந்தன் மற்றும் முகிலன் ஆகியோருக்குச் சொந்தமான இந்தப் படகின் முகப்புப் பகுதி தீயினால் கடுமையாகச் சேதமடைந்தது. இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீ வைத்த மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.