1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
3 Jul 2026, 1:07 am
<p><strong>1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்</strong> </p><p>ராணிப்பேட்டை, ஜூலை 2 – ராணிப்பேட்டையில், தேசிய கால்நடை நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ், 9-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஒழலை கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் தலைமையில் புதன்கிழமை (ஜூலை 1) தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 1.90 லட்சம் கால்நடைகளுக்கு இலவசமாகத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி விவரங்கள் அனைத்தும் ‘பாரத் பசுதான்’ செயலியில், கால்நடை வளர்ப்போரின் அலைபேசி எண் மற்றும் அடையாளச் சான்று சரிபார்ப்பு மூலம் உடனுக்குடன் பதிவேற்றப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மரு.வெங்கடேஸ்வரன், உதவி இயக்குநர் மரு.திருநாவுக்கரசு, ஒன்றியக் குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க, மருத்துவக் குழுவினர் தடுப்பூசி பணிகளை ஒருங்கிணைத்தனர்.</p>
