புத்தகக் கண்காட்சியில் உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பு ஆட்சியரிடம் தமுஎகச மனு
4 Nov 2026, 11:42 pm
<p><strong>புத்தகக் கண்காட்சியில் உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பு ஆட்சியரிடம் தமுஎகச மனு</strong></p><p>ராணிப்பேட்டை, நவ.4-ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியின் கலை நிகழ்ச்சிகளில் மாவட்டத்தின் உள்ளூர் கலைஞர்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்ளுக்கு வாய்ப்பளிக்கக் கோரி தமுஎகச சார்பில் மாவட்டத் தலைவர் த. இரஜினி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.அந்த மனுவில், மாவட்டத்தில் உள்ள தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கட்டக்கூத்து, பரதநாட்டியம், மேற்கத்திய நடனக்கலைஞர்கள் மற்றும் கிராமியப் பாடகர்களுக்கு மாலை நேர நிகழ்ச்சிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புத்தகக் கண்காட்சிக்கு நாள்தோறும் வருகை தரும் ஒன்றிய அளவிலான அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகளைவெளிப்படுத்தப் பகல் நேரமேடையைப் பயன்படுத்த அனுமதிப்பதுடன், அவர்களது கலை நிகழ்ச்சிகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.</p><p>மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், 2026 புத்தகத் திருவிழாவில் தமுஎகச நிர்வாகிகளை இணைத்துச் செயல்படுத்துவதாக உறுதியளித்தார். இந்நிகழ்வில் தமுஎகச மாவட்டப் பொருளாளர் எம்.கே.ஜீவா, மாவட்டத் துணைச் செயலாளர்கோ. ரங்கநாயகி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர். மணிகண்டன், ஜி. கோபால்ராஜ், ஜெ. மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
