தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

15 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் பாகவளி அரசு பள்ளிக்கட்டிடம்!

5 Jun 2026, 4:04 am
15 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் பாகவளி அரசு பள்ளிக்கட்டிடம்!

15 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் பாகவளி அரசு பள்ளிக்கட்டிடம்!

ராணிப்பேட்டை, ஜூன் 4- இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் பாகவளி பகுதியில், மக்களின் பொது வரிப்பணத்தில் கட்டப்பட்ட அரசினர் உயர்நிலைப்பள்ளி கட்டிடம் கடந்த 15 ஆண்டுகளாகப் பயன்பாட்டிற்கு வராமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ள அவலம் அரங்கேறியுள்ளது. கடந்த 2010 - 2011 ஆம் நிதியாண்டில், நபார்டு நிதி உதவித் திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறையால் சுமார் ரூ. 77.11 லட்சம் மதிப்பீட்டில் இக்கட்டிடம் அனைத்து வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தும் இதுவரை பயன்பாட்டிற்கு வராததால், இப்பள்ளி வளாகம் தற்போது குடிமகன்களின் புகலிடமாக மாறியுள்ளது. இதனைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் வகுப்பறை கதவுகள், ஜன்னல்கள், இரும்பு ஷட்டர்கள் மற்றும் மின்சாரப் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்; அறிவியல் ஆய்வகமும் முற்றிலும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. அருகிலேயே ஒரு தனியார் பள்ளி சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், “மாணவர்களின் பாதுகாப்பு இல்லை” என்ற காரணத்தைக் கூறி அரசுப் பள்ளி கட்டிடம் முடக்கி வைக்கப்பட்டிருப்பது அதிகாரிகளின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது மாவட்ட கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கட்டிடத்தை உடனடியாகப் பழுது பார்த்து, மீண்டும் பள்ளி அல்லது வேறு ஏதேனும் அரசுத் துறை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இதில் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.