தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

15 Jul 2026, 11:32 pm
சென்னை விரைவு செய்திகள்

தேசிய தொழில் பழகுநர் மேளா

ராணிப்பேட்டை,ஜூலை 15 - ராணிப்பேட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில், வரும் திங்கட் கிழமை (ஜூலை 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை “பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் மேளா” நடைபெறவுள்ளது. மத்திய, மாநில அரசு நிறுவனங் கள், தனியார் நிறுவனங் கள் மற்றும் தொழில் நிறுவ னங்களின் கூட்டமைப்புகள் பங்கேற்கும் இந்த முகாமில் தங்களுக்குரிய வர்த்தகப் பிரிவில் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து, மத்திய அரசின் என்.ஏ.சி சான்றிதழ் பெற்றுப் பயனடையலாம். 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த மாணவர்களும் தங்களுக்கு விருப்பமான பிரிவில் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேரலாம். இது தொடர்பான கூடு தல் விபரங்களை அறிய விரும்புவோர், இராணிப் பேட்டை மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரில் இராணிப்பேட்டை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்திலும், மின்னஞ்சல் ranipetdsto@gmail.com தொலைபேசி / கைப்பேசி எண்கள் 04172-271219, 9842517007 தொடர்பு கொள்ளலாம். தகுதியுள்ள இளைஞர் கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயனடையு மாறு மாவட்ட ஆட்சியர் ந. ப்ரியா ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கல்பாக்கத்தில் நாளை அவசரநிலை ஒத்திகை

கல்பாக்கம், ஜூலை 15 – கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட பாவினி அணுமின் நிலையத்தில், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் அனுமதியைப் பெறுவதற் காக வரும் ஜூலை 17-ம் தேதி அவசரநிலை ஒத்திகை நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். வீரப்பன் தலைமையில் நடை பெறும் இந்த ஒத்திகையில், பேரிடர் காலங்களில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அணுசக்தித் துறை மேற் கொள்ள வேண்டிய தயார் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. காவல் துறை, வருவாய்த்துறை, தீய ணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தப் பயிற் சியில் பங்கேற்கின்றனர். பாதுகாப்பு நடவடிக் கைகளைச் சோதிக்கும் நோக்கில் நடைபெறும் இந்த ஒத்திகையினால் பொது மக்களுக்கோ, போக்கு வரத்துக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.