தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மாயம்? கல்வித்துறையின் அலட்சியம் !

8 May 2026, 12:29 am
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மாயம்? கல்வித்துறையின் அலட்சியம் !

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மாயம்? கல்வித்துறையின் அலட்சியம் !

ராணிப்பேட்டை, மே 7 – தமிழகத்தில் நடைபெற்று வரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகாரிகள் பெரும் மெத்தன போக்கால் மாணவர் ஒருவரின் விடைத்தாள் காணாமல் போனதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 25ம் தேதி நடைபெற்ற 10ஆம் வகுப்பு கணிதப் பாட தேர்வின் போது, ஒரு மாணவனின் விடைத்தாள், விடைத்தாள்களை பிரித்து அடுக்கும் 'கலக்கிப் பிரித்தல்' ராணிப்பேட்டை மையத்தில் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் பொதுத் தேர்வுப் பணிகளில், ஒரு மாணவனின் விடைத்தாள் காணாமல் போனது அதிகாரிகள் கவனக் குறைவா அல்லது திட்டமிட்ட அலட்சியமா என்ற கேள்வி டீ கடை பென்ச் வரை எழுந்துள்ளது.

இது குறித்து விளக்கம் பெற ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவ லரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, "மீண்டும் அழைக்கிறேன்" என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முதன்மை கல்வி அலுவலரை நேரில் சந்தித்து விளக்கம் கேட்கச் சென்ற செய்தியாளர், "அதிகாரி வேலையாக இருக்கிறார்" எனக் கூறி அலுவலக ஊழியர்கள் அனுமதி மறுத்து அலைக்கழித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் 6ம் தேதி, பொதுத்தேர்வு பணி ஒதுக்கீட்டில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து 'தீக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.

அப்போது ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் உரிய கவனம் செலுத்தி இருந்தால், தற்போது மாணவனின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இத்தகைய விபரீதத்தை தடுத்திருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது மாவட்ட ஆட்சியர் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் சூழலைப் பயன்படுத்தி, கல்வித்துறை அதிகாரிகள் இவ்வளவு பெரிய தவறை மறைக்க முயல்கிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

"ஒரு மாணவனின் ஓராண்டு உழைப்பு வீணாவதை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது.

விடைத்தாள் மாயமானது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

தேர்தல் பணிகளுக்கு மத்தியில், மாணவர்களின் எதிர்காலம் சார்ந்து மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுப்பாரா.? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.