தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரங்கசாமியின் டென்னிஸ் ஷாட்டும்... பாஜகவின் ‘லட்சிய’ லாவணியும்!

19 Mar 2026, 3:18 pm
ரங்கசாமியின் டென்னிஸ் ஷாட்டும்... பாஜகவின் ‘லட்சிய’ லாவணியும்!
<p><strong>ரங்கசாமியின் டென்னிஸ் ஷாட்டும்... பாஜகவின் &lsquo;லட்சிய&rsquo; லாவணியும்!&nbsp;</strong></p> <p>புதுச்சேரி அரசியலில் இப்போது &lsquo;சத்தமில்லாத&rsquo; ஒரு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. வழக்கமாக முதல்வர் ரங்கசாமி &nbsp;டென்னிஸ் விளையாடினால் பந்து மட்டும் தான் எகிறும், ஆனால் இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியே &nbsp;எகிறிப் போய்விடுமோ என்ற பீதி கிளம்பியுள்ளது.</p> <p>&lsquo;லட்சிய&rsquo; சிக்கலும்... அமித் ஷாவின் &lsquo;டைரக்ட்&rsquo; என்ட்ரியும்! கூட்டணிக்குள் &lsquo;லட்சிய ஜனநாயகக் கட்சி&rsquo;(லட்டாரி வியாபாரி மார்ட்டின் மகன் கட்சி) என்ற புது வரவுதான் இப்போது வில்லனாக வந்து நிற்கிறது. &ldquo;யாருப்பா அது? அவங்களை உள்ள விட்டா நாங்க வெளியே போயிருவோம்&rdquo; என ரங்கசாமி தரப்பு ரத்த அழுத்தம் ஏறி நிற்க, பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவோ, &ldquo;முதல்வர் ஒத்துக்கிட்டாருப்பா&rdquo; என கூலாகக் கொளுத்திப் போட்டுள்ளார். நிலைமை மோசமானதால் தில்லியில் இருந்து வந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், ரங்கசாமி அனுப்பிய ஐவர் குழு &lsquo;கறாராக&rsquo; பேசியிருக்கிறது. அதற்கு மாண்டவியா கொடுத்த பதில் தான் ஹைலைட்: &ldquo;இது அமித் ஷா போட்ட முடிச்சு... அவருகிட்டயே பேசிக்கோங்க!&rdquo; அதாவது, &ldquo;எங்ககிட்ட ஒன்னும் இல்லீங்க, மேல இருக்குற பெரியவர்கிட்டயே டீல் பண்ணிக்கோங்க&rdquo; எனப் பந்தை அமித் ஷா பக்கம் தட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டது பாஜக தரப்பு. டென்னிஸ் விளையாடும் முதல்வர்... தவிக்கும் தாமரை! கூட்டணி உடையுமா? நீடிக்குமா? என ஒட்டுமொத்த புதுச்சேரியும் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கும் வேளையில், முதல்வர் ரங்கசாமியோ செம கூலாக டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தார். &ldquo;நீங்க லட்சியக் கட்சியை வைப்பீங்களோ இல்ல லட்சியத்தைப் பிடிப்பீங்களோ... எனக்கு என் டென்னிஸ் முக்கியம்&rdquo; என்பது போல இருக்கிறது அவர் பாணி. கூட்டணியில் பாஜகவின் &lsquo;மாஸ்டர் பிளான்&rsquo;? 16 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ், மீதி 14-இல் பாஜக என கணக்குப் போட்ட நிர்மல் குமார் சுரானா, திடீரென &lsquo;லட்சியக் கட்சி&rsquo;யையும் உள்ளே இழுத்து வந்திருப்பது, பாஜக புதுச்சேரியில் தலைமை தாங்கப் போடும் ஸ்கெட்ச் என்றே அரசியல் நோக்கர்கள் கிசுகிசுக்கின்றனர். ரங்கசாமியை &lsquo;ரெஸ்ட்&rsquo; எடுக்க வைத்துவிட்டு, தாமரையை அதிகாரத்தில் அமர வைக்க போடும் &nbsp;திட்டம் என தெரிந்து கொண்டு ரங்கசாமி செவ்வாய்கிழமை இரவு நடைபெற்ற கூட்டணி தொடர்பான கலந்தாலோசனைக்கு வராமல் பாஜக தலைவர்களுக்கு தண்ணீ காட்டினார். இதனால் வெறுத்துப்போன பாஜக புதுச்சேரி தலைவர்கள் மேலிட தலைவர்களுடன் புதுதில்லிக்கு படையெடுத்துள்ளனர். என்ன நடக்கப்போகிறது? இப்போது பந்து அமித் ஷாவின் கோர்ட்டில் இருக்கிறது. அமித் ஷா போன் போடுவாரா? அல்லது ரங்கசாமி தனது டென்னிஸ் ராக்கெட்டைத் தூக்கிக்கொண்டு கூட்டணியை விட்டு வெளியே &lsquo;சர்வீஸ்&rsquo; செய்வாரா என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.