தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரங்கசாமியா, நாராயணசாமியா, கன்பியூஸ் ஆன அமித் ஷா! பாஜக தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமே காமெடி...

14 Feb 2026, 4:33 pm
ரங்கசாமியா, நாராயணசாமியா, கன்பியூஸ் ஆன அமித் ஷா! பாஜக தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமே காமெடி...
<p><strong>ரங்கசாமியா, நாராயணசாமியா, கன்பியூஸ் ஆன அமித் ஷா! பாஜக தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமே காமெடி...</strong></p> <p>புதுச்சேரியில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், காரைக் காலில் உள்துறை அமைச்சர் அமித் &nbsp;ஷா கலந்து கொண்ட, பாஜக-வின் &nbsp;முதல் பிரச்சாரக் கூட்டமே &lsquo;காமெடி &nbsp;கிளப்&rsquo; போல மாறிவிட்டது. &ldquo;ஒன்றிய அரசு எனக்குப் பவர் &nbsp;தரவில்லை என்றால், நான் தேர்த லையே புறக்கணிப்பேன்&rdquo; என புதுச் சேரி முதலமைச்சர் ரங்கசாமி சீரிய ஸாகப் பேசிக் கொண்டிருக்க, அதையெல்லாம் துளியும் சட்டை &nbsp;செய்யாத ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காரைக்கா லில் வந்து இறங்கினார். வரும் வழி யில் தெருச் சுவரில் இருந்த தாமரைச் &nbsp;சின்னத்திற்குப் பெயிண்ட் அடித்து, &nbsp;தனது &lsquo;ஆர்ட்&rsquo; திறமையைக் காட்டிய &nbsp;கையோடு மேடை ஏறினார். குழம்பிய மொழிபெயர்ப்பாளர் மேடையில் அமித் ஷா இந்தி யில் அதிரடியாகப் பேச, அதைத் தமிழில் மொழிபெயர்த்தவர் செய்த &nbsp;சொதப்பல் தான் ஹைலைட். அமித் &nbsp;ஷா முன்பு இங்கு முதலமைச்ச ராக இருந்த நாராயணசாமி மிக &nbsp;மோசமான ஆட்சியை வழங்கினார் &nbsp;என்று குற்றம் சாட்டிக் கொண்டி ருக்க, &nbsp;மொழிபெயர்ப்பாளரோ ஆர்வக் கோளாறில், &ldquo;முதலமைச்சர் &nbsp;நாராயணசாமி சிறப்பாக ஆட்சி செய் கிறார்&rdquo; என அவுட் ஆஃப் சிலபஸில் &nbsp;பேசிவிட்டார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. நாராயணசாமி பழைய முதல மைச்சர் என்பதைத் துல்லியமாகத் தெரிந்திருந்த அமித் ஷா, உடனே &nbsp;குறுக்கிட்டு &ldquo;அவர் இல்லப்பா... இவர்!&rdquo; எனத் திருத்தினார். சுதா ரித்துக் கொண்ட மொழிபெயர்ப்பா ளர், உடனே கியரை மாற்றி, &ldquo;நாராயண சாமி மோசமான ஆட்சியை வழங்கி னார், ரங்கசாமிதான் சூப்பர்&rdquo; என &nbsp;அடுத்த தடத்தில் வண்டியை ஓட்டி னார். &nbsp;அமித் ஷா-வின் கூட்டத்தின் இந்த பெயர் குழப்ப வீடியோதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. தனக்குத்தானே &lsquo;செக்&rsquo; வைத்த அமித் ஷா! மாற்றிப் பேசிவிடக் கூடாது, தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்ட அமித் ஷா, விடாமல் முன்னாள் முதலமைச்சர் நாரா யணசாமி மீது ஊழல் புகார்களை அடுக்கினார். &ldquo;கடந்த ஐந்து ஆண்டு களில் இந்தியா முன்னேறியுள்ளது, ஆனால் நாராயணசாமி காலத்தில் புதுச்சேரி பின்னோக்கிச் சென்றது&rdquo; என ஐந்தாண்டுகளுக்கு பிறகும், பழைய பல்லவியையே பாடி முடித் தார். கூட்டத்தை விட்டு போகும்போது, &nbsp;தப்புத் தப்பாக உளறும் இவர் களை வைத்துக்கொண்டு எப்படி தான், நாம் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோமோ என்று புலம்பிக் கொண்டே அமித் ஷா விமானம் ஏறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.