முந்தய பக்கம்

அசாம், கேரளம், புதுச்சேரியில் ரேண்டம் ஒதுக்கீடு நிறைவு

21 Mar 2026, 2:42 pm
அசாம், கேரளம், புதுச்சேரியில் ரேண்டம் ஒதுக்கீடு நிறைவு
<p><strong>அசாம், கேரளம், புதுச்சேரியில் ரேண்டம் ஒதுக்கீடு நிறைவு</strong></p> <p>சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள அசாம், கேரளம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை (விவிபேட்) கருவிகளின் முதற்கட்ட ரேண்டம் ஒதுக்கீடு நிறைவடைந்துள்ளதாக இந்தி யத் தேர்தல் ஆணையம் சனியன்று அறி வித்தது. வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு ஒதுக்கும் பணி, முறையான இரண்டு கட்ட ரேண்டம் ஒதுக்கீடு செயல்முறை மூலம் நடத்தப்பட்டதாக தேர்தல் ஆணை யம் தெளிவுபடுத்தியுள்ளது. &nbsp;இரண்டு கட்ட ரேண்டம் ஒதுக்கீடு என்பது வாக்குப்பதிவு இயந்திரங்கள் எந்தத் தொகுதிக்கு அல்லது எந்த வாக்குச் சாவ டிக்குச் செல்லும் என்பதை முன்கூட்டியே யாரும் கணிக்க முடியாது என்பதை உறுதி செய்யவே இந்த முறை பயன் படுத்தப்படுகிறது. அதே போல முதற் கட்ட ஒதுக்கீடு என்பது மாவட்ட அளவில் உள்ள கிடங்குகளில் இருந்து அந்தந்தத் தொகுதிக்கு இயந்திரங்கள் பிரிக்கப் படுகின்றன. இது அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் கணினி மூலம் சீரற்ற முறையில் நடைபெறும். அசாம், கேரளம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் ஏப்., 9 அன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பி டத்தக்கது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram