தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ராம்ராஜ் காட்டன் ஆலை தொழிலாளி மரணம்: இழப்பீடு கோரி விடிய விடியப் போராட்டம் பணிந்த நிர்வாகம் ரூ. 7 லட்சம் இழப்பீடு வழங்கியது!

4 Apr 2026, 4:02 pm
ராம்ராஜ் காட்டன் ஆலை தொழிலாளி மரணம்: இழப்பீடு கோரி விடிய விடியப் போராட்டம்  பணிந்த நிர்வாகம் ரூ. 7 லட்சம் இழப்பீடு வழங்கியது!
<p><strong>ராம்ராஜ் காட்டன் ஆலை தொழிலாளி மரணம்: இழப்பீடு கோரி விடிய விடியப் போராட்டம் &nbsp;பணிந்த நிர்வாகம் ரூ. 7 லட்சம் இழப்பீடு வழங்கியது!</strong></p> <p>மதுரை, ஏப்.3 - மதுரை கோவில்பாப்பாக்குடியில் உள்ள ராம்ராஜ் காட்டன் ஆலை வாச லில், உயிரிழந்த சுமைப் பணித் தொழி லாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி சிஐடியு தலைமையில் நடை பெற்ற இருநாள் தொடர் போராட்டம் வெற்றியில் முடிந்தது. நிர்வாகம் இறங்கி வந்து ரூ. 7 லட்சம் இழப்பீடு &nbsp;வழங்க ஒப்புக்கொண்டதை அடுத்து &nbsp;போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. தொழிலாளி மரணம் கோவில்பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்த எம்.கண்ணன் (45), கடந்த 20 &nbsp;ஆண்டுகளுக்கும் மேலாக ராம்ராஜ் காட்டன் ஆலை வளாகத்தில் தினக்கூலி அடிப்படையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணி யாற்றி வந்தார். வியாழனன்று மாலை &nbsp;பணியில் இருந்தபோது அவர் திடீ ரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். நீண்ட காலம் உழைத்த தொழிலாளி யின் மரணத்திற்கு நிர்வாகம் பொறுப் பேற்று உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்களும், சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கமும் வலியுறுத்தின. காவல்துறை அராஜகம் நிர்வாகம் பிடிவாதம் காட்டியதால், தொழிலாளியின் உடலை ஆலை வாயிலில் வைத்து மறியல் போராட்டம் &nbsp;தொடங்கியது. 4 மணி நேரப் போராட் டத்திற்குப் பிறகு, இரவு 9 மணியளவில் காவல்துறையினர் கண்ணனின் உடலை வலுக்கட்டாயமாக அகற்ற &nbsp;முயன்றனர். இதில் தொழிலாளர் களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிஐடியு மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மலை. கண்ணனை வேனில் ஏற்றி, விளக்குகளை அணைத்துவிட்டு காவல் துறையினர் தாக்கினர். இந்த அராஜ கத்தையும் மீறி இரவு முழுவதும் போராட்டம் நீடித்தது. பணிந்த நிர்வாகம் - சுமுக முடிவு வெள்ளிக்கிழமை மதியம் வரை நீடித்த போராட்டத்தைத் தொடர்ந்து, வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. முதலில் &nbsp;சொற்பத் தொகையை வழங்க முன் வந்த நிர்வாகம், தொழிலாளர்களின் உறுதியான போராட்டத்தால் பணிந்தது. &nbsp;இறுதியில், உயிரிழந்த கண்ணனின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டு, அந்தத் &nbsp;தொகை உடனடியாக &nbsp;செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. உடற்கூராய்வுக்குப் பின் கண்ணனின் உடல் உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட்டு, கோவில் பாப்பாக்குடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. உறுதிமிக்க போராட்டம் இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.அர விந்தன், செயலாளர் மலை. கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர் பி.மகாலட்சுமி, சிஐடியு சுமைப் பணி &nbsp;சங்கத் தலைவர் செ.ஆஞ்சி, செயலா ளர் சொ. பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் &nbsp;எஸ்.எம். பாண்டி, கே. ஜீவானந்தம், நல். மூர்த்தி, சிஐடியு ஆட்டோ சங்க தலைவர் இரா. கருணாநிதி மற்றும் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். சரஸ்வதி, சிபிஎம் மதுரை மேற்கு ஒன்றி யச் செயலாளர் ம.தனபாலன், கிழக்கு &nbsp;மண்டலச் செயலாளர் எஸ்.பாலகிருஷ் ணன், சிஐடியு மாநகர் மாவட்ட நிர்வா கிகள் பாலசுப்ரமணியன், லெனின் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்ற னர். &nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;(ந.நி)</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.