தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாம் ஓய்ந்திருக்கப் போவதில்லை - ச. வீரமணி

12 Nov 2026, 8:56 pm
நாம் ஓய்ந்திருக்கப் போவதில்லை - ச. வீரமணி

நாம் ஓய்ந்திருக்கப் போவதில்லை - ச. வீரமணி

நவம்பர் 1 அன்று ராம்லீலா மைதா னத்தில் திரண்டிருந்த மாபெரும் மக்கள் திரள், ஓர் அறைகூவலை விடுத்துள்ளது. தசரா பண்டிகையின் ஒரு பகுதியாக, இராவணனை எரிக்கும் சடங்கு நடைபெறும் இடமாக அறியப்பட்ட இந்த மைதானம்,இக்காலகட்டத்தின் தீய சக்திகளை அழிப்ப தற்கான ஒரு புதிய முழக்கத்தை எழுப்பியது. இந்திய மக்களின் மிகமுக்கியமான அரசமைப்புச் சட்ட உரிமைகளில் ஒன்றான ‘வாக்களிக்கும் உரிமையைப்’ பறிக்கத் துடிக்கும்,கட்டுப்பாடின்றிச் செயல்படும் சக்திகளை ஒழிப்பதற்கான உறுதியை வெளிப்படுத்தும் நிகழ்வாக இது அமைந்தது.பீகாரில் தொடங்கிய, வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் ‘சிறப்பு தீவிர திருத்த செயல்முறை’ (SIR) மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீய முயற்சிக்கு எதிரான போராட்டத்தின் பரிணாம வளர்ச்சியை ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ ஏற்கனவே பதிவுசெய்துள்ளது. அன்றிலிருந்து இன்றுவரை, எதிர்ப்பையும் போராட்டத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் பல முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. நவம்பர் 1 அன்று, ராம்லீலா மைதானத்தில்,கிளர்ந்தெழுந்த தேசத்தின்மக்கள் வெள்ளம், கடந்த 12 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ்/பாஜக கூட்டணியின் தலைமை யில் இயங்கும் கார்ப்பரேட்மதவாதக் கூட்டுக்கு எதிராகப் போராட உறுதிபூண்டுள்ள அனைத்து அரசியல் சக்திகளின் ஒரு பரந்த தளமாகஉருவெடுத்துள்ளது. ‘இந்தியா’ கூட்டணி, இந்த ஒன்றுகூடலுக்கு ஓர் ஒருங்கிணைக்கும் சக்தியாக அமைந்ததுஇயல்பானதேயாகும்.

எஸ்.ஐ.ஆர். (SIR) முறையும் வாக்காளர் நீக்கமும்

‘எஸ்ஐஆர்’ எனப்படும் ‘சிறப்பு தீவிர திருத்த செயல்முறையின்’ செயல்பாடுகள், இந்தப் போராட்டம் நாடு தழுவிய பரிமாணத்தை எட்டியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன. வாக்காளர்களைப் பெருமளவில் வாக்குரிமையிலிருந்து நீக்கும் முயற்சி, எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி இப்போது நிரூபணமாகியுள்ளது. ‘சிறப்பு தீவிர திருத்தசெயல்முறை’ நிறைவடைந்த மாநிலங்களிலும், அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள மாநிலங்களிலும், சுமார் 13 கோடியே 50 லட்சம் வாக்காளர்களின் பெயர்களநீக்கப்பட்டுள்ளன. இது நம் மக்கள்தொகையில் மிக முக்கியமானதொரு விகிதமாகும்.

இந்தச் செயல்முறை மிகுந்த பிளவை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது தற்செயலான நிகழ்வு அல்ல. ஆர்எஸ்எஸ்/பாஜக கூட்டணியின் மிக முக்கியமான இரண்டு செயல்திட்டங்களான, அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்குதல் மற்றும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதல் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றிய அவரது கடந்தகாலப் பணி, இந்தச் செயல்பாட்டிற்கு அவரைப்பொருத்தமானவராக மாற்றியது.

‘எஸ்.ஐ.ஆர்’ தொடங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முற்றிலும் மோசடியான இந்தச் செயல்முறை, நாடு முழுவதும் புதிய வாக்காளர் பட்டியல்களை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. மற்ற இரு தேர்தல் ஆணையர்களுடன் ஞானேஷ் குமாருக்கு எந்தஉடன்பாடும் இல்லை. மோடி-ஷா ஜோடியின் முத்திரை பதிந்த இந்த அணுகுமுறை, அவரை எந்த அளவுக்குத் தனிமைப்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவதாகக் கூறப்பட்டாலும், இந்தியக் குடியுரிமையை மத அடையாளத்தின் அடிப்படையில் மறுவரையறை செய்வதே இந்தச் செயல்முறையின் உண்மையான நோக்கம் என்பது தெள்ளத் தெளிவாகிறது. உண்மையில், அமித் ஷா ‘கண்டறிதல், நீக்குதல் மற்றும் வெளியேற்றுதல்’ (detect, delete and deport) என்ற முழக்கத்தின் மூலம் இந்தச் செயல்பாட்டின் தன்மையைவெளிப்படையாகவே அறிவித்தி ருந்தார். ஆனால், இந்தச் செயல்முறையின் விளைவாக, தலித்துகள்,பழங்குடியினர், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் போன்ற அதிகாரமற்ற பிரிவுகளைச் சேர்ந்த பல உண்மையான வாக்காளர்கள், விகிதாச்சாரத்திற்கு மாறாக, வாக்காளர் பட்டியலி லிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் கொந்தளிப்பும் ஆட்சியாளர்களின் விரக்தியும்

‘எஸ்.ஐ.ஆர்’ நடைமுறைக்கு எதிராக அடிமட்ட அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எந்தளவுக்கு என்றால், யோகி ஆதித்யநாத்தே நேரடியாக களமிறங்கி, வாக்காளர் பட்டியலிலிருந்து 1 கோடியே 70 லட்சம் இந்துக்களின் பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ராம்லீலா மைதானத்தில் வெடித்த இந்த எதிர்ப்பு, மிகவும் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்டதால்,அரசாங்கமும் அதன் உயர் அதிகாரிகளும் ஞானேஷ் குமாரைப் பாதுகாக்க முழு பலத்துடன் களமிறங்கியுள்ள னர். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் புலனாய்வு, ‘எஸ்.ஐ.ஆர்’ நடைமுறையை மேற்கொள்வதில் சட்ட மற்றும் நடைமுறை மீறல்கள் நடந்துள்ளதையும், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குள்ளேயே குளறுபடிகள் இருந்ததையும் அம்பலப்படுத்தியது. அதன் பிறகு, செப்டம்பர் 23 முதல் ஞானேஷ் குமார்பொதுவெளியில் தலைகாட்டாமல் மறைந்துவிட்டார். இன்றைக்கும் கூட, சுதந்திர ஊடகங்களும், ஏன், பிரதான ஊடகங்களின் சில பிரிவுகளும் கூட, இந்த மிகப்பெரியமுறைகேடுகள் குறித்த புதிய ஆதாரங்களையும் ஆவணங்களையும் தொடர்ந்து வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துகொண்டிருக்கின்றன.

தங்கள் வாக்குரிமையைப் பாதுகாப்ப தற்காக முன்னெடுக்கப்பட்ட இந்த மாபெரும் ஜனநாயகப்போராட்டத்தின்போது, மக்கள் கடுமையான ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு உறுதியுடன் நின்றனர். ஜந்தர் மந்தரை போராட்ட இடமாக அங்கீகரிக்கும் நிலையை அரசு ரத்து செய்தபோதிலும், ராம்லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டதன் மூலம் அரசின் அந்த முயற்சி தோல்வியடைந்ததுநிரூபணமானது. அதற்கு முந்தைய நாள், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக நடத்தப்பட்ட பொதுவிசாரணையில், சில உடனடி கோரிக்கைகளை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஞானேஷ் குமாரைப் பதவியிலிருந்து நீக்குதல், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் ‘எஸ்ஐஆர்’ நடவடிக்கையை ரத்து செய்தல் மற்றும்தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் அதிகாரத்தை முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சட்டத்தைத் திருத்துதல் ஆகியவை முக்கிய கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டன. அனைத்து எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் உள்ள அவற்றின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் வாக்காளர் பட்டியலிலிருந்துநீக்கப்பட்ட வாக்காளர்கள் எனப் பல தரப்பினரும் ஒன்றிணைந்து இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது, நிலவும்சூழலின் தீவிரத்தை உணர்த்துகிறது.

ராம்லீலா மைதானம் மக்களின் வளர்ந்து வரும் அதிருப்தி உணர்வுக்குச் சாட்சியாக இருந்த அதேசமயத்தில், எதிர்க்கட்சிகளின் இந்தக் கோரிக்கைகள், பாஜகவிடம் எந்தவொரு நம்பகமான விளக்கமோ அல்லது ஆதாரமோ இல்லாத சில முக்கியமான அம்சங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும். ‘வினாஷ காலே விபரீத புத்தி’ (அழிவு காலம் வரும்போது புத்தி

தடுமாறும்) என்ற பழமொழிக்கு ஏற்ப, அமித் ஷாவும் அவரது குண்டர்படையினரும் தங்களைஅவமானப்படுத்திக்கொள்ளும் வகையிலான கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், அமித் ஷா எவ்விதத் தயக்கமும் இன்றி, ஊடுருவல்காரர்கள் அனைவரையும் வெளியேற்றுவோம் என்று அறிவித்தார். மேலும், ‘எஸ்.ஐ.ஆர்’ திட்டத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், சட்டவிரோத ஊடுருவல்காரர் களைப் பாதுகாக்கவே முயல்கின்றன என்று குற்றம் சாட்டினார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆவண ங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களின்படி, சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், இதை மறுத்த அமித் ஷா, நீக்கப்பட்டவர்களில் மூன்று கோடி பேர் ஊடுருவல்காரர்கள் என்று வாதிட்டார். அவரைப் பின்பற்றி, பாஜகவின் நிதின் நபின், கொல்கத்தாவில் பேசும்போது, வாக்காளர் பட்டியலிலிருந்து ஆறு கோடி ஊடுருவல் காரர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இவர் களுக்குப் போட்டியாக,மேற்கு வங்கத்தைச்சேர்ந்த சுவேந்து அதிகாரி, ‘எஸ்.ஐ.ஆர்’ திட்டத்தின் நோக்கம் ஊடுருவல்காரர்களை வெளியேற்றி, அவர்களை வங்கதேசத்திற்கு அனுப்பி வைப்பதுதான் என்று தெரிவித்தார். ஆனால், ‘எஸ்.ஐ.ஆர்’ திட்டத்தின் தரவுகளை இவர்கள் எவரும் கவனிக்கவில்லை. உண்மையில், ஆறு மாநிலங்களில் நீக்கப்பட்ட 9 கோடியே 80 லட்சம் வாக்காளர்களில், வெறும் 1,600 பேர் மட்டுமேவெளிநாட்டினர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான வாழ்வா சாவா போர்

இத்தகைய கற்பனையான கதையாடல்கள், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை அராஜக மானவை மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானவை என்று சித்தரிக்கும் அபத்தமான நிலைக்குச் சென்றுள்ளன. அதுமட்டுமின்றி, ‘ஜனநாயகத்தைக் காக்க, அராஜகத்திற்கு எதிராகப் போராடுவோம்’ என்ற புதிய முழக்கத்தையும் அவர்கள்உருவாக்கியுள்ளனர். இவ்வளவு பெரிய அளவில் ஊடுருவல் நடப்பதாகக் கூறுவது, உள்துறை அமைச்சரான அமித் ஷாவையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்குச் சமம் என்பதை அவர்கள் உணரவில்லை. ஏனெனில், ஊடுருவலைத்தடுக்கும் பொறுப்பு அவரது அமைச்சகத்திடமே உள்ளது. உண்மை யில், பெரும்பாலான மாநிலங்களில் பாஜகஆட்சியில் இருக்கும்போது, ஜனநாயகம் எப்படி ஆபத்துக்குள்ளாகும் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.ராம்லீலா மைதானம் மகத்தான ஒற்றுமையையும் உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளது. பல்வேறு அடக்குமுறைகளையும் பயணத் தடைகளையும்எதிர்கொண்டு, தொலைதூர இடங்களிலிருந்து வந்த மக்கள், எதற்கும் பணியத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது. குடிமக்களாகத் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச நலத்திட்டங்களைப் பெறுவதற்குஅடிப்படையான, தங்களின் வாக்குரிமையை இழந்துவிடுவோமோ என்ற அச்சமே அவர்களை இத்தகைய போராட்டத் திற்குத் தூண்டியுள்ளது.

இந்தியா இவ்வளவு பரந்த மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த நாடாக இருப்பதால், ராம்லீலாவில் எடுக்கப்பட்ட தீர்மானமானது, அந்த உரிமையையும் நாட்டின் ஆட்சியுடனான அவர்களின் தொடர்புகளையும் சட்டப்பூர்வமாக்கி யுள்ள ஜனநாயக, மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதை மையமாகக் கொண்டு வலுப்பெற வேண்டும். எனவே, நாம் ஓய்ந்திருக்கப்போவதில்லை, மாறாகப் போராட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல இருக்கிறோம். மக்களைச் சென்றடைவதில் இன்னும்ஆழமாகவும் பரவலாகவும் செல்ல வேண்டும்.ஆர்எஸ்எஸ்/பாஜக கூட்டணி அம்பலமாகியுள் ளது. அவர்கள் சாதாரண அரசியல் சக்திகள்அல்ல. நமது ஜனநாயகத்தைப் பாதுகாப்பத ற்கான இந்த வாழ்வா சாவா போரில் அவர்கள் அகற்றப்படவேண்டும்.அதுவரையிலும் நாம் ஓய்ந்திருக்கப்போவதில்லை, ஓய்ந்திருக்கவும் முடியாது.‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ தலையங்கம், நவம்பர் 8, 2026தமிழில் சுருக்கம்: ச. வீரமணி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.