தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூய்மைத்தொழிலாளிக்கு பாலியல் தொல்லை சிஐடியு தலையீட்டால்’ராம்கி’ நிறுவனம் அதிரடி நடவடிக்கை

26 May 2026, 12:55 am
தூய்மைத்தொழிலாளிக்கு பாலியல் தொல்லை   சிஐடியு  தலையீட்டால்’ராம்கி’ நிறுவனம் அதிரடி நடவடிக்கை
<p><strong>தூய்மைத்தொழிலாளிக்கு பாலியல் தொல்லை சிஐடியு தலையீட்டால்’ராம்கி’ நிறுவனம் அதிரடி நடவடிக்கை</strong></p><p>​​​​​​​சென்னை, மே 25- சென்னை மாநகராட்சி 11-வது வார்டில் ராம்கி நிறுவனத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் மாரி யம்மாள் மற்றும் அவரது கணவர் மீதான வேலை நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, அவர்க ளுக்கு மீண்டும் பணி வழங்க ப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர் மகேஷ் என்பவர் கொடுத்த பாலியல் தொல்லை மற்றும் லஞ்சப் புகாரைத் தட்டிக்கேட்ட மாரியம்மாள் மற்றும் அவரது கணவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை பொது தொழிலாளர் சங்கம் தீவிரப் போராட்டத்தை அறிவித்திருந்தது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.லோகநாதன் மாநகராட்சி ஆணையர் மற்றும் ராம்கி நிறுவனத்திற்குப் புகார் அனுப்பிய நிலையில், திங்க ளன்று ராம்கி நிறுவன அதி காரி பிரபாகர் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. உடன் சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.மணி மேகலை ,சங்கத்தின் துணைச்செயலாளர் வி.ரவி க்குமார், ஜூகைப் உள்ளிட் டோர் பங்கேற்றனர். மீண்டும் வேலை இந்த பேச்சுவார்த்தை யில், மாரியம்மாள் மற்றும் அவரது கணவருக்கு மீண்டும் வேலை வழங்க வும், குற்றச் செயலில் ஈடு பட்ட ஊழியர்களைத் தற்கா லிக இடமாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், மாரியம்மாள் உடல் நிலை குணமடையும் வரை அவருக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வும், பாலியல் புகார் குறித்து உள் விசாரணை குழு விசார ணையைத் தொடங்க வும் நிறுவனம் ஒப்புக் கொண்டது. கோரிக்கைகள் ஏற்கப்பட்டதைத் தொட ர்ந்து, செவ்வாயன்று நடை பெறவிருந்த போராட்டங் கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஆர்.லோகநாதன் தெரிவித் துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கத் துணை நின்ற சிஐடியு, செங்கொடி சங்கம் மற்றும் ஊடகங்களுக்கு அவர் நன்றி யைத் தெரிவித்துக் கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.