இராமேஸ்வரம் கோவிலில் இலவச லட்டுகளை ரூ.3.4 கோடிக்கு விற்று மோசடி 6 ஊழியர்கள் சஸ்பெண்ட்
15 May 2026, 10:16 pm

இராமேஸ்வரம் கோவிலில் இலவச லட்டுகளை ரூ.3.4 கோடிக்கு விற்று மோசடி 6 ஊழியர்கள் சஸ்பெண்ட்

இராமநாதபுரம், மே 15 - இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ் வரம் இராமநாதசுவாமி கோவில் லட்டு விற்பனையில் பல கோடி ரூபாய் மோசடி செய்த ஊழியர்கள் 6 பேரை சஸ்பெண்ட் செய்து இணை ஆணை யர் செல்லத்துரை உத்தரவிட்டார்.

கோவில் லட்டு விற்பனையை கண்காணிக்க இளநிலை உதவியாளர் பஞ்சமூர்த்தி நியமிக்கப்பட்டார்.

இதில் அவர் சொந்த பணத்தில் மூலப் பொருட் களை வாங்கித் தந்து, லட்டுகள் தயா ரித்து விற்று, பாதி வருவாயை அவர் எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

இக்கோவிலில் தினமும் பிரசாத மாக 30 கிராமில் 1,520 லட்டுகள் இலவச மாக வழங்கப்படுகிறது. 50 கிராமில் ஒரு லட்டு ரூ.15 வீதம் கோவில் வளா கத்தில் உள்ள கவுண்டரில் விற்று சொந்தக் கணக்கில் எடுத்துக்கொண்டு பல கோடி ரூபாய் மோசடி செய்து உள்ளார்.

இலவச லட்டு வழங்கிய தில் மோசடி செய்தும், தனியாக கவுண்டரில் விற்கும் லட்டுகளில் கூடுதல் லட்டுகளை தயாரித்து விற்று சொந்தக் கணக்கில் வரவு வைத்து கொண்ட விதத்திலும் 3 ஆண்டில் 22.71 லட்சம் லட்டுகள் விற்கப்பட்டுள்ளன.

இதில் ரூ. 3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் மோசடி நடந்திருக்கலாம். இதற்கு காரணமான பஞ்சமூர்த்தி, உடந்தையாக இருந்த கோவில் ஊழியர் களான விக்ரம் (பஞ்சமூர்த்தியின் மகன்), விற்பனையாளர்கள் சிவனேஸ் வரி, செல்வி, லாவண்யா, அம்பிகா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து விசாரணை நடை பெற்று வருகிறது என்று இணை ஆணையர் செல்லத்துரை தெரிவித் துள்ளார்.