தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரூ.4.70 கோடியில் ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் திறந்து வைத்தார்

22 Jul 2026, 9:34 pm
இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரூ.4.70 கோடியில் ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் திறந்து வைத்தார்
<p><strong>இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரூ.4.70 கோடியில் ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் திறந்து வைத்தார்</strong></p><p>மதுரை, ஜூலை 22- இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரூ.4.70 கோடி செலவில் புதிதாக அமைக் கப்பட்ட ஓடும் தொழிலாளர் (ரன்னிங் ஸ்டாப்) ஓய்வு அறையை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் திறந்து வைத்தார். லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள் உள் ளிட்ட ஓடும் தொழிலாளர்கள் பாதுகாப்பான ரயில் இயக் கத்திற்காக போதிய ஓய்வு பெறும் வகையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 610 சதுர மீட்டர் கீழ்த்தளம் மற் றும் 380 சதுர மீட்டர் மேல்தளத் துடன் அமைந்துள்ள இந்த கட்டடத்தில் ஒரே நேரத்தில் 34 பேர் தங்கி ஓய்வெடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பெண் ஓடும் தொழிலா ளர்களுக்கான தனி ஓய் வறை, ரயில் இன்ஜின் ஆய் வாளர்களுக்கான ஓய்வறை, சமையலறை, உணவறை, வாசிப்புப் பிரிவு, யோகா மற் றும் தியான அறை, உடற் பயிற்சிக் கூடம், நடைபயிற் சிக்கான பசுமைத் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு வசதி கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கணினி மென் பொருள் மூலம் அறைகள் ஒதுக்கீடு, கண்காணிப்பு கேமராக்கள், குறைதீர் பதிவு செய்ய ‘கியூஆர் கோடு’ வசதி, 24 மணி நேர பாதுகாவ லர் சேவை ஆகியவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஊழியர்களுக்கு 90 சதவீத மானியத்தில் சைவ மற்றும் அசைவ உணவுகளும் வழங்கப்படுகின்றன. இந்த ஓய்வு அறைக்கு “அக்கினி தீர்த்தம் குழு பாது காப்பிடம்” என்று பெயரி டப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, முத ன்மை எலக்ட்ரிக் இன்ஜின் பொறியாளர் என்.பாலாஜி, முதுநிலை கோட்ட பொறியா ளர் எம்.கார்த்திக், முதுநிலை கோட்ட மின் போக்குவரத்து பொறியாளர் ஏ.ஆர்.சுரேந்தி ரன், பகுதி கோட்ட பொறியா ளர் ஸ்ரீ ஹரிபாபு உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.