இராமேஸ்வரத்தில் பயணிகளை வரவேற்கும் ரயில் பெட்டி உணவகம்
20 Jun 2026, 11:31 pm
<p><strong>இராமேஸ்வரத்தில் பயணிகளை வரவேற்கும் ரயில் பெட்டி உணவகம்</strong></p><p>மதுரை, ஜூன் 20– இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பழைய ரயில் பெட்டியை மாற்றிய மைத்து உருவாக்கப்பட்டுள்ள நவீன ரயில் பெட்டி உணவகத்தை, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா வெள்ளிக்கிழமை யன்று திறந்து வைத்தார். மதுரை ரயில்வே கோட்டத்தில் முதன்முறையாக மேற்கொள்ளப் பட்டுள்ள இந்த வித்தியாசமான முயற்சிக்காக, பயன்பாட்டில் இல்லாத பழைய ரயில் பெட்டி ஒன்று ஒதுக்கப் பட்டு, அதன் உட்புறத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு நவீன வசதிகளுடன் கூடிய உணவகமாக மாற்றப்பட்டுள்ளது. பொதுவாக பயன்பாட்டிற்கு உத வாத பழைய ரயில் பெட்டிகள் ஏலத்தில் விடப்பட்டு உதிரிபாகங்க ளாக உடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் பழைய ரயில் பெட்டி, தற்போது உணவகமாக மாற்றப்பட்டு பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராகியுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில், பாதுகாப்பான முறை யில் தயாரிக்கப்படும் சைவ மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்பட உள்ளன. உணவகத் திறப்பு விழாவில் முது நிலை கோட்ட வர்த்தக மேலாளர் டி.எல். கணேஷ், தெற்கு ரயில்வே துணை முதன்மை வர்த்தக மேலாளர் பி. வெங்கட சுப்பிரமணியன், கோட்ட வர்த்தக மேலாளர் பி. மோகனப் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
