இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் மே தின பேரணி - பொதுக்கூட்டம்
26 May 2026, 10:13 pm
<p>இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் மே தின பேரணி - பொதுக்கூட்டம் தாலுகா குழு உறுப்பினர் என்.மாரி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.காசிநாததுரை பேரணி துவக்கி வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் மா.கணேசன், மாவட்டச் செயலாளர் ஆர்.குருவேல், தாலுகாச் செயலாளர் ஜி.சிவா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க.கருணாகரன், வி.காசிநாததுரை ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ஒண்டிவீரன் நகர் கிளைச் செயலாளர் இ.நம்புச்செல்வம் நன்றி கூறினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் இ.ஐஸ்டின், ஏ.ஆரோக்கிய நிர்மலா, கே.சுமதி பலர் கலந்து கொண்டனர்.</p>
