தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சந்தன மாதா கோவிலுக்குள் பிடாரியம்மனை தேடிய அதிகாரிகள் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.யிடம் ராமையன்பட்டி மக்கள் புகார்

12 Jul 2026, 11:56 pm
சந்தன மாதா கோவிலுக்குள் பிடாரியம்மனை தேடிய அதிகாரிகள் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.யிடம் ராமையன்பட்டி மக்கள் புகார்
<p><strong>சந்தன மாதா கோவிலுக்குள் பிடாரியம்மனை தேடிய அதிகாரிகள் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.யிடம் ராமையன்பட்டி மக்கள் புகார்</strong></p><p>திண்டுக்கல், ஜூலை 12- திண்டுக்கல் அருகே ராமை யன்பட்டி சந்தன மாதா கோவி லுக்குள் எல்லைப் பிடாரியம்மன் கோவில் இருக்கிறதா என்று உயர் நீதிமன்ற தீர்ப்பை காட்டி ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் எங்களது மத வழி பாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று திண்டுக்கல் மக்க ளவை உறுப்பினர் ஆர்.சச்சிதா னந்தம் எம்.பி.யிடம் வெள்ளியன்று கிராம மக்கள் மனுக் கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதா வது: எங்கள் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த குடும்பங்கள் பல தலை முறைகளாக வசித்து வருகின்றன. கடந்த 16.3.2026 ஆம் தேதி உயர் நீதிமன்ற உத்தரவைக் காட்டி, ஜூலை 7 ஆம் தேதி இந்து சமய அற நிலையத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் எந்த முன் அறிவிப்பும் இன்றி அள வீடு செய்ய வந்திருந்தனர். இது குறித்து விளக்கம் கேட்டபோது, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தில் கத்தோலிக்க தேவாலயங்களோ, குடியிருப்பு வீடுகளோ இருந்தால் அவற்றை அகற்ற அளவீடு செய்ய வந்திருப்பதாக கூறினர். உயர்நீதிமன்ற உத்தரவில் குறிப்பி டப்பட்டுள்ள கன்னிமார் கோவில், செல்லாண்டியம்மன், எல்லைப் பிடாரியம்மன் ஆகிய கோவில்கள் ராமையன்பட்டியில் இல்லை. கோவில்கள் இல்லையென்பதால் வழிபாடுகளும் நடைபெற வில்லை. உயர்நீதிமன்ற உத்தர வில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வே எண்.231-10ல் சுமார் 50 குடும்பங்கள் நிரந்தரமாக குடியிருந்து வருகிறார் கள். அதே பகுதியில் ஒரு அரசு ஆரம்பப் பள்ளியும் நடைபெறு கிறது. எங்கள் ஊரில் 150 ஆண்டு களாக பூர்வக்குடிகளாக கத்தோ லிக்க மக்களே வசித்து வருகிறார் கள். இங்கு சந்தன மாதா ஆலயம் தான் உள்ளது. இந்த சந்தன மாதா கோவிலும் கடந்த 150 ஆண்டு களாக உள்ள மிக பழமையான கோவிலாகும். ஆடி மாதத்தில் நடைபெறும் திருவிழாவில் இரவு முழுவதும் அசைவ அன்னதானம் நடைபெறும். இங்கு 150 அடி உயர கொடிமரமும், இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளு டன் கூடிய கல்வாரி மலை கெபி யும் உள்ளது. இந்த சந்தன மாதாக் கோவிலுக்குள் பிடாரியம்மன் கோவில் இருக்கிறதா என்று அதி காரிகள் நீதிமன்ற உத்தரவைக் காட்டி அளவிட வந்தது எந்த விதத்தி லும் நியாயமில்லை. இந்த வழக்கில் எங்கள் கிராம மக்களை எதிர் மனுதாரராகவும் சேர்க்கப்படவில்லை. எனவே எங் கள் இராமையன்பட்டி கிராம மக்க ளுக்கு நியாயம் கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். எங்க ளது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். மத வழிபாட்டு உரிமை வழங்க வேண் டும் என்று ஆர்.சச்சிதானந்தத்தி டம் மனுக் கொடுத்தனர். மனு வை பெற்றுக் கொண்ட ஆர்.சச்சி தானந்தம் எம்.பி. உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதிய ளித்தார். இந்த நிகழ்வின் போது, சிபிஎம் திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார், மாநகர்க்குழு உறுப்பினர் டியாகு எமர்சன், ஊர் நாட்டாண்மை பஜான் சார்லஸ், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேந்திரன் சூசை, ஊர் நிர்வாகக் குழுவினர் விஜய் ஆரோக்கியம், தேவராஜ், வேளாங் கண்ணி, சின்னப்பன், ஜார்ஜ்புஷ், குழந்தைராஜ், சகாயராஜ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.