ராமசாமியாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
5 Jun 2026, 3:25 am
<p><strong>ராமசாமியாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு</strong></p><p>திருவில்லிபுத்தூர், ஜூன் 4- வத்திராயிருப்பு வட்டத் திற்கு உட்பட்ட கான்சாபுரம், அத்திக்கோவில், கூமா பட்டி, நெடுங்குளம், பிளவக் கல் அணை உள்ளிட்ட பகுதி களில் விவசாயிகள் பயிரிட் டுள்ள நெற்பயிர்கள் தற் போது அறுவடைக்கு தயா ராக உள்ளன. இந்நிலையில், விவசாயி களிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழ கம் சார்பில் கான்சாபுரம் பகு தியில் ஏற்கனவே நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு விவசாயிகளிடமி ருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, ராமசாமியாபுரத்தில் இரண் டாவது நெல் கொள்முதல் நிலையம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவில் ராமசாமி யாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். நெல் கொள்முதல் நிலை யத்தில் விவசாயிகளிடமி ருந்து ‘அடங்கல்’ உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்டு, முறையாக பதிவு செய்யப் பட்ட பின்னர் நெல் மூட்டை கள் கொள்முதல் செய்யப் பட உள்ளன. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழ கம் மூலம் மத்திய சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பப் படவுள்ளன. திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை நெல் கொள் முதல் நிலைய பட்டியல் எழுத்தர் செந்தில்குமார் செய்திருந்தார்.</p>
