தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ராமநதி–ஜம்புநதி உபரிநீர் மேல்மட்ட கால்வாய் திட்டப்பணியை விரைந்து முடித்திடுக! விவசாயத் தொழிலாளர் சங்க தென்காசி மாவட்ட மாநாடு கோரிக்கை

24 Sept 2026, 9:27 pm
ராமநதி–ஜம்புநதி உபரிநீர் மேல்மட்ட கால்வாய் திட்டப்பணியை விரைந்து முடித்திடுக!   விவசாயத் தொழிலாளர் சங்க தென்காசி மாவட்ட மாநாடு கோரிக்கை

ராமநதி–ஜம்புநதி உபரிநீர் மேல்மட்ட கால்வாய் திட்டப்பணியை விரைந்து முடித்திடுக! விவசாயத் தொழிலாளர் சங்க தென்காசி மாவட்ட மாநாடு கோரிக்கை

தென்காசி,செப்.24-அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தென்காசி மாவட்ட 2 ஆவது மாநாடு ஆலங்குளத்தில் எழுச்சிமிகு பேரணியுடன் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பாலுச்சாமி தலைமை தாங்கி, சங்கக் கொடியை ஏற்றி வைத்தார்.வரவேற்புக் குழுத் தலைவர் வெற்றிவேல் வரவேற்புரையாற்றினார். வரவேற்புக் குழுச் செயலாளர் ராமகிருஷ்ணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.

சங்கத்தின் மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன் துவக்கவுரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாதர் சங்க மாவட்டப் பொறுப்பாளர் தங்கம், சிபிஎம்ஆலங்குளம் தாலுகாச் செயலாளர் கனகராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கணபதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.மாவட்டச் செயலாளர் குணசீலன் வேலை அறிக்கையையும், மாவட்டப் பொருளாளர் பாலு நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் நிறைவுரையாற்றினார்.

முன்னதாக குருவன்கோட்டை ராஜேந்திரன் நினைவு ஜோதி, வீரகேரளம்புதூர் புதுக்காவு நினைவு ஜோதி மற்றும்மருதம்புத்தூரில் இருந்து தோழர்கள் சிவனையா, அதிரூபன், சுடலையாண்டி, பாக்கியமுத்து, ஈசாக் ஆகியோரின் நினைவு ஜோதிகள் மாநாட்டு அரங்கிற்கு கொண்டு வரப்பட்டன.

நிர்வாகிகள் தேர்வு

மாநாட்டில் மாவட்டத் தலைவராக நடராஜன், மாவட்டச் செயலாளராக குணசீலன், மாவட்ட பொருளாளராக சொர்ணம்,மாவட்டத் துணைத் தலைவராக பார்வதி, மாவட்ட துணைச் செயலாளராக முத்தையாஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.ஒன்றிய அரசு வி.பி.ஜி.ராம்ஜி திட்டத்தை ரத்து செய்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புஉறுதியளிப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையும், தினக்கூலி ரூ. 700 வழங்க வேண்டும். தொழிலாளர்களின் கண்விழியை ஸ்கேன் செய்வதை நிறுத்திட வேண்டும்.

ராமநதி–ஜம்புநதி உபரிநீர் மேல்மட்ட கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை விரைந்து முடிக்கவேண்டும். 2005 முதல் நடைபெற்று வரும் இத்திட்டத்தில் இதுவரை சுமார் ரூ.55 கோடி செலவிடப்பட்டும், பணிகள் பாதியளவே முடிந்துள்ளன.இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் 30 குளங்கள், 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள்பயன்பெறுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர்தட்டுப்பாடும் குறையும். எனவேஇப்பணியை விரைந்து முடிக்கவேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.