முறையான சிகிச்சை அளிக்காததால் இளம்பெண் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு
17 Jun 2026, 9:27 pm

முறையான சிகிச்சை அளிக்காததால் இளம்பெண் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு

உறவினர்கள் போராட்டம் இராமநாதபுரம், ஜூன் 17- இராமநாதபுரம் அருகே உள்ள பால் கரை கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி யின் மனைவி தமிழ்ச் செல்வி (35), மூக்குவலி மற்றும் சுவாசப் பிரச் சனை காரணமாக கடந்த மே 18-ஆம் தேதி இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டால் உடல்நிலை சீராகும் என தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டார்.

இதைய டுத்து மே 28-ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு தமிழ்ச் செல்வியின் உடல்நிலை மோசமடைந்த தாகவும், அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூன் 16-ஆம் தேதி தமிழ்ச்செல்வி உயிரிழந்ததாக மருத்துவ மனை நிர்வாகம் அவரது குடும்பத்தின ருக்கு தகவல் தெரிவித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவி னர்கள் மற்றும் பால்கரை கிராம மக்கள், முறையான சிகிச்சை அளிக்காததே உயி ரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டி மருத்துவமனை முன்பு திரண்டனர்.

மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த தமிழ்ச்செல்வியின் குடும்பத்திற்கு நிவார ணம் வழங்க வேண்டும் மற்றும் அவரது கணவர் முனியசாமிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர், சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு அமைத்து ஆய்வு நடத்தப்படும் என்றும், அதன் அறிக் கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்ததாக கூறப் படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் இராமநாதபுரம் மாவட்டக் குழு, சம்பந்தப்பட்ட மருத்து வர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், உயிரி ழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கவும் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி யுள்ளது.