திருச்சி விரைவு செய்திகள்
25 May 2026, 10:16 pm

இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

இராமநாதபுரம், மே 25 வேலைவாய்ப்பு பதிவு, பதிவு புதுப்பித்தல், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, கூடு தல் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணி களுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் இராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் எந்தவித கட்டணமின்றி வழங்கப்படுகிறது. மேலும், http://www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் அளவில் செய்துகொள்ள வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் எவரும் போலி விளம்ப ரங்களையோ அல்லது இடைத் தரகர்களையோ நம்பி தனிப்பட்ட விபரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக் குறிப்பில் தெரி வித்துள்ளார்.

அரசு ஆணையிட்டும் அகற்றப்படாத டாஸ்மாக் கடைகள் நடவடிக்கை எடுக்க ம.நீ.ம. வலியுறுத்தல்

விருதுநகர், மே 25- தமிழக அரசு உத்தரவிட்டும் விருதுநகரில் பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் டாஸ்மாக் கடை கள் செயல்பட்டு வருகின்றன. எனவே, அதை உடனே அகற்ற வேண்டுமென மக்கள் நீதிமய்யம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, கடந்த மே 12 அன்று, வழிபாட்டுத் தலங் கள், பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் ஆகிய வற்றிலிருந்து 500 மீட்டருக்குள் உள்ள டாஸ்மாக் கடை களை 2 வாரத்திற்குள் அகற்ற வேண்டுமென உத்தர விட்டது. ஆனால், விருதுநகரில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், மாலைப்பேட்டைத் தெரு, கே.வி.எஸ் பள்ளியின் பின்வாசல், நகராட்சி அலுவலகம் அருகே, மதுரை சாலை நகராட்சி மேல்நிலை தொட்டி வளாகம் அருகே, காமராஜர் பைபாஸ் சாலை ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகை யில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை மூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.

திருவில்லிபுத்தூர் அருகே ‘பனங்கள்’ விற்ற 3 பேர் மீது வழக்கு

திருவில்லிபுத்தூர், மே 25- திருவில்லிபுத்தூர் அருகே அரசு அனுமதியின்றி ‘பனங்கள்’ விற்பனைக்காக வைத்திருந்த 3 பேர் மீது போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். மம்சாபுரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட அணையின் தோப்பு பகுதியில் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் அருண்பாண்டியன் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தார். அப்போது மம்சாபுரம் மீனாட்சி தோட்டத்து தெரு வைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர், அரசு அனுமதி யின்றி 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடத்தில் 2 லிட்டர் ‘பனங்கள்’ விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்து அழித்ததுடன், செல்வகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், செண்பகத்தோப்பு சாலையில் கருப் பையா செட்டியார் தென்னந்தோப்பு அருகே காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் கந்தசாமி ரோந்து சென்றபோது, மாரனேரியைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன் மற்றும் ஜோதிராஜ் ஆகியோர் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடத்தில் 3 லிட்டர் ‘பனங்கள்’ விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்து அழித்த போலீசார், இருவர்மீதும் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

மே 29 - இராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

இராமநாதபுரம், மே 25- இராமநாதபுரம் மாவட்டத்தில் மே மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 29.5.2026 அன்று காலை 10.30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை விவாதிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

திருவில்லிபுத்தூரில் பொது மருத்துவ முகாம்

திருவில்லிபுத்தூர், மே 25- திருவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்கம் சார்பில் வைத்திலிங்கபுரம் விநாயக தொடக்கப்பள்ளியில் இல வச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. சங்கத் தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை, திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பி னர் ஏ.கார்த்திக் தொடங்கி வைத்தார். முகாமில் ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் டால்பின் ஜி.முருகதாசன், அங்குராஜ், வெங்கடேஷ், கோவிந்த ராஜ், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திருவில்லிபுத்தூர் குருவம்மாள் சாரிடபிள் டிரஸ்ட் இலவச பொது மருத்துவமனை சார்பில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்று, முகாமிற்கு வந்த பொது மக்களை பரிசோதனை செய்து தேவையான சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

ரோசல்பட்டி ஊராட்சி ஆர்.வி.ஆர். நகரில் அடிப்படை வசதிகளை செய்திடுக!

விருதுநகர், மே 25- விருதுநகர் ஒன்றியம் ரோசல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.வி.ஆர் நகரில் சாலை, கழிவுநீர் வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்திட வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சி யின் பாண்டியன் நகர் கிளைச் செயலாளர் நாகேந்திரன் அளித்த மனுவில் கூறியதா வது: ரோசல்பட்டி ஊராட் சிக்கு உட்பட்டது ஆர்.வி.ஆர். நகர். சுமார் 500 குடியிருப்பு கள் உள்ளன. இங்குள்ள முதல் தெருவில் கிளை நூல கம், கிராம நிர்வாக அலு வலர் அலுவலகம் செயல் பட்டு வருகிறது. இந்நூல கத்திற்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே, முதல் தெரு மற்றும் இரண்டாவது தெரு பகுதி களில் சாலை வசதி மற்றும் வாறுகால் வசதி செய்து தர வேண்டும். மேலும், இங்கு ஊராட்சி நிர்வாகத்தினர் குப்பை களை தினசரி கொட்டுகின்ற னர். பின்பு, மொத்தமாக சேர்ந்த பின்பு அள்ளுகின்ற னர். இதனால் சுகாதாரச் சீர் கேடு ஏற்படுகிறது. எனவே, வேறு பகுதியில் குப்பை களை கொட்டி அள்ள வேண் டும் என அதில் தெரிவித்துள் ளனர்.

கூலி உயர்வு ஒப்பந்த பிரச்சனை மருத்துவத் துணி சிறு விசைத்தறி உரிமையாளர்கள் ஜூன் 2 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

இராஜபாளையம், மே 25- கூலி உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக மருத்துவத் துணி உற்பத்தியாளர்கள் நட வடிக்கை எடுக்காததை கண்டித்து, ஜூன் 2 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட சிறு விசைத்தறி உரிமை யாளர்கள் முடிவு செய்துள்ளனர். இராஜபாளையம் வட் டம் சத்திரப்பட்டி பகுதியில் சுமார் 7 ஆயிரம் விசைத் தறிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் நேர டியாகவும், மேலும் 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். சிறு விசைத்தறி உரிமை யாளர்கள் மற்றும் மருத்து வத் துணி உற்பத்தியாளர்கள் இடையே 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் மேற் கொள்ளப்படும் நடைமுறை உள்ளது. ஒப்பந்தம் ஏப்ரல் 30 அன்றுடன் முடிவடைந்த நிலையில், மூன்று வாரங்க ளுக்கும் மேலாகியும் புதிய ஒப்பந்தம் குறித்து மருத்து வத் துணி உற்பத்தியாளர்கள் முன்வரவில்லை என கூறப் படுகிறது. இதையடுத்து, சத்தி ரப்பட்டி வட்டார சிறு விசைத் தறி உரிமையாளர்கள் சங்க மகாசபைக் கூட்டம் தலைவர் குருசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராள மான சிறு விசைத்தறி உரிமை யாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மே மாத இறுதி வரை விசைத்தறி களை இயக்குவது என்றும், அதற்குள் மருத்துவத் துணி உற்பத்தியாளர்கள் 1.6.2026 முதல் அமலுக்கு வரும் வகையில் கூலி உயர்வை அறிவிக்காவிட்டால், ஜூன் 2 முதல் விசைத்தறிக்கூடங் களை மூடி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சங்க செயலாளர் கோவிந்தராஜ், ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மின்சாரம் தாக்கி இளம் பெண் பலி

திருவில்லிபுத்தூர், மே 25- திருவில்லிபுத்தூர் அருகே மின்சாரம் தாக்கி இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது. நத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நல்லூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கராணி என்பவ ருக்கு 2 குழந்தைகள் உள்ள னர். இவரது கணவர் வெள் ளைராஜா, சிவகங்கை மாவட்டத்தில் ஜேசிபி டிரை வராக பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த காற்றுடன் கூடிய மழையால், வீட்டின் அருகே இருந்த கொடிக்கம் பம் சாய்ந்து மின்கம்பி அறு ந்து வீட்டின் தகரச் சீட்டின் மீது விழுந்ததாக கூறப்படு கிறது. இந்த நிலையில், தகரச் சீட்டில் காயவைக்கப்பட்டி ருந்த ஈரத்துணிகளை எடுக் கச் சென்ற தங்கராணி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் மயங்கி விழுந்தார். தகவலறிந்த உறவினர் கள், தங்கராணியை 108 ஆம்புலன்ஸ் மூலம் வத்திரா யிருப்பு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல றிந்து சிவகங்கையில் இருந்து வந்த கணவர் வெள் ளைராஜா, நத்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது வழக்கு

திருவில்லிபுத்தூர், மே 25- சிறுமியை திருமணம் செய்து கர்ப்ப மாக்கியதாக இளைஞர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவில்லிபுத்தூர் நகரின் மங்காபுரம் தெருவைச் சேர்ந்த பாப்பாத்தியின் கணவர் இறந்துவிட்ட நிலையில், அவருக்கு ஐந்து பெண் குழந்தைகள் மற்றும் நான்கு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் நான்கு பெண் குழந்தைகளுக்கு திருமணம் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. திரு மணம் ஆகாத இளைய மகள், இனாம்கரி சல்குளத்தில் வசிக்கும் தனது திருமணமான சகோதரியின் வீட்டில் தங்கி வந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவருடன் பழகியதில் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த போதி லும், கடந்த 5.7.2024 அன்று வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், அதே ஊரில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சிறுமி கர்ப்பமானார். கர்ப்ப காலம் 9 மாதம் நிறைவடைந்த நிலை யில், திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இதையடுத்து, சிறுமியின் தாய் பாப்பாத்தி, திருவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், தமிழரசன் மீது சிறுமியை திருமணம் செய்து கர்ப்ப மாக்கிய குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.