திருச்சி விரைவு செய்திகள்
8 Jun 2026, 9:37 pm

சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனே திறந்திடுக! பொதுமக்கள் கோரிக்கை

இராமநாதபுரம், ஜூன் 8- இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி யில், 2024–2025 ஆம் ஆண்டுக்கான சுகாதார மானியத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம் கட்டப்பட்டு அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. எனினும், கட்டிடப் பணிகள் முடிந்து சுமார் 6 மாதங்கள் கடந்தும் புதிய மருத்துவமனை இதுவரை திறக்கப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. சாயல்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், மேம்பட்ட மருத்துவ சேவைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் புதிய மருத்து வமனை திறப்புக்காக காத்திருக்கின்றனர். அனைத்து அடிப்படை வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ள கட்டிடம் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் அரசு நிதியும் பொது மக்களின் எதிர்பார்ப்பும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ள தாக அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் உடனடி நடவடிக்கை எடுத்து புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடத்தை விரைவில் திறந்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டவிரோத மது விற்பனையை தடுக்க கோரி ஆட்சியரிடம் மனு

இராமநாதபுரம், ஜூன் 8- இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்திற்கு உட் பட்ட சாயல்குடி அருகேயுள்ள கீழமுந்தல் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சட்டவிரோத மது விற்பனையால் இளைஞர்கள் மட்டுமின்றி சிறுவர்களும் மது அருந்தும் நிலை உருவாகி யுள்ளதாகவும், இதன் காரணமாக சமூக ஒழுங்கு பாதிக்கப் பட்டு பல்வேறு சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக வும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரி களின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக கூறும் பொது மக்கள், உடனடி நடவடிக்கை எடுத்து சட்டவிரோத மது விற்பனையை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, கீழமுந்தல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், கிராமத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கவும், இளை ஞர்கள் மற்றும் சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட நிர்வாகம், உரிய விசாரணை மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படு கிறது.

அனுமதியின்றி செங்கல் சூளை மண் கடத்தியவர் கைது

திருவில்லிபுத்தூர், ஜூன் 8- திருவில்லிபுத்தூர் அருகே உரிய அரசு அனுமதி யின்றி செங்கல் சூளை மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநரை கைது செய்து சிறை யில் அடைத்தனர். கிருஷ்ணன்கோவில் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட மதுரை–தென்காசி சாலையில் உள்ள அருணாச் சலா தனியார் விடுதி அருகே காவல் நிலைய சார்பு ஆய்வா ளர் கௌதம் விஜய் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய அரசு அனுமதியின்றி சுமார் 4 யூனிட் அளவிலான செங்கல் சூளை மண் ஏற்றி வரப்பட்டு வந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மண்ணின் மதிப்பு ரூ.4,000 என கூறப்படுகிறது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த விக்னேஷ் பாண்டி யை போலீசார் கைது செய்தனர். மேலும், டிப்பர் லாரி மற்றும் அதில் இருந்த 4 யூனிட் செங்கல் சூளை மண்ணும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லாரி உரிமையாளர் பாஸ்கர் மற்றும் ஓட்டுநர் விக்னேஷ் பாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முதல் குற்றவாளியான விக்னேஷ் பாண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.

கணக்கில் வராத ரூ.54 ஆயிரம் பறிமுதல் விருதுநகர் சார்பதிவாளர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை

விருதுநகர், ஜூன் 8- விருதுநகர் சார்பதிவாளர் அலுவலகத் தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற் கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.54 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்ட நிலை யில், சார்பதிவாளர் மீது துறை ரீதியான நட வடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட் டுள்ளது. கடந்த ஜூன் 4 ஆம் தேதி மாலை, விருது நகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தி னர். அப்போது, முறையான கணக்கில் இடம் பெறாத ரூ.54 ஆயிரம் ரொக்கம் கைப்பற் றப்பட்டது. சோதனை நடைபெற்றுக் கொண்டி ருந்தபோது அலுவலகத்தில் இருந்த சார்பதி வாளர் ஜின்னத்துல் பிர்தௌஸ் அங்கி ருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. மேலும், அன்றைய தினம் 11 பத்திரப் பதிவு களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதி லும், அவற்றின் பதிவு நடைமுறை நிறை வேற்றப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் பதிவு செய்ய வந்த பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளான தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பொதுமக்களின் பத்தி ரப் பதிவுகளை மேற்கொள்ளாமல் பணியில் அலட்சியம் காட்டியதற்கும், சோதனை யின்போது ஒத்துழைப்பு வழங்காமல் வெளி யேறியதற்கும் சார்பதிவாளர் ஜின்னத்துல் பிர்தௌஸ் மீது துறை ரீதியாக கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பத்திரப் பதிவுத்துறை தலைவர் மற்றும் ஐ.ஜி.க்கு பரிந்துரை செய்துள்ளனர். இது தொடர்பாக மேலதிக நடவடிக்கை கள் குறித்து பத்திரப் பதிவுத்துறை முடிவு எடுக்க உள்ளது.

அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை

மாணவர்களின் கல்வி உரிமை பாதிப்பு விருதுநகர், ஜூன் 8- விருதுநகரில் உள்ள நகராட்சி முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் போதுமான ஆசிரி யர்கள் நியமிக்கப்படாததால், மாணவர் களின் கல்வி உரிமை பாதிக்கப்படுவதாக பெற்றோர்களும் பொதுமக்களும் கவலை தெரிவித்துள்ளனர். விருதுநகர் பாவாலி சாலையில் செயல் பட்டு வரும் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப் பள்ளி, கடந்த 2025 செப்டம்பர் மாதம் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. இதையடுத்து, சுற்றுவட்டார பகுதி களைச் சேர்ந்த ஏராளமான ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவி கள் இப்பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். தற்போது பள்ளியில் 500-க்கும் மேற் பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இதில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 200 ஆக உள்ளது. ஆனால், இந்த வகுப்புகளுக்கான பாடங்களை கற்பிக்க தமிழ் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கு தலா ஒரு ஆசிரியர் என மொத்தம் 2 ஆசி ரியர்கள் மட்டுமே பணியில் இருப்பதாக கூறப்படுகிறது. மறுபுறம், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த 11 ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இத னால் உயர்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் போதிய கல்வி வசதிகளை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதால், 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வரும் பெற்றோர்களிடம், வேறு பள்ளிகளில் சேர்ப்பது நல்லது என பள்ளி நிர்வாகம் அறிவுறுத்துவதாகவும் கூறப்படு கிறது. இதன் காரணமாக, பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாண வர்கள் கூட அருகிலுள்ள தனியார் பள்ளி களை நாட வேண்டிய கட்டாயம் உருவாகி யுள்ளது. எனவே, மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, நகராட்சி முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி நகர்மன்ற உறுப்பி னர் சுல்தான் அலாவுதீன் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நிரந்தர நியமனங்கள் நடை பெறும் வரை, பிற பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களை தற்காலிகமாக இப் பள்ளிக்கு மாற்றி நியமிக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.