திருச்சி விரைவு செய்திகள்
10 Oct 2026, 9:20 pm

வாலாந்தரவை இளைஞர் கொலைஉறவினர்கள் சாலை மறியல்

இராமநாதபுரம், அக்.10-இராமநாதபுரம் மாவட்டம், வாலாந்தரவை தெற் கூரைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் பிரேம் குமார் (26)கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் சிலருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி அவரது உவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கடந்த அக்.5 ஆம் தேதி முதல் காணாமல் போன பிரேம் குமார் குறித்து, அவரது தந்தை முருகன் அக்.6 ஆம் தேதி கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பணம் வசூலிப்பது தொடர்பான முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.பணம் தருவதாகக் கூறி தோப்புவலசை கடற்கரைப் பகுதிக்கு வரவழைத்து, அரிவாளால் வெட்டிக் கொலை செய்து, அவர் அணிந்திருந்த 2 பவுன் நகையை எடுத்துக் கொண்டு உடலைப் புதைத்ததாகக் கைது செய்யப்பட்ட காளிதாஸ் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து, உடல் தோண்டி எடுக்கப்பட்டு, இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக் காக அனுப்பப்பட்டது.

இந்நிலையில், கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்குவதுடன், குடும் பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, இராமநாதபுரம்–ராமேசுவரம் தேசிய நெடுஞ் சாலையில் வாலாந்தரவை பகுதியில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் போராட்டம் தொடர்ந்ததால், மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார்கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 110.10 மி.மீ. மழை

விருதுநகர், அக்.10-விருதுநகர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 110.10 மி.மீ. மழை பதிவானது. சராசரியாக 9.18 மி.மீ. மழை பெய்துள்ளது.அதிகபட்சமாக காரியாபட்டியில் 26.90 மி.மீ., ஸ்ரீவில்லிபுத்தூரில் 18.40 மி.மீ., திருச்சுழியில் 17 மி.மீ.,அருப்புக்கோட்டையில் 12.50 மி.மீ., வத்திராயிருப்பில் 10.80 மி.மீ., பெரியாறு பிளவக்கல் பகுதியில் 9.80 மி.மீ., கோவிலாங்குளத்தில் 6.40 மி.மீ., விருதுநகரில் 5 மி.மீ., வெம்பக்கோட்டையில் 2.40 மி.மீ. மற்றும் இராஜபாளையத்தில் 1 மி.மீ. மழை பதிவானது.

உயர்கல்வி மாணவர்கள் கல்விக்கடன் பெற கட்டுப்பாட்டு அறை

விருதுநகர், அக்.10-விருதுநகர் மாவட்டத்தில் 2026–2027ஆம் கல்வியாண் டில் உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதற்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி உதவி மையக் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கல்விக்கடன் விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற,ஆட்சியர் அலுவலகத்தின் நான்காவது தளத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை நேரில் அணுகலாம் அல்லது 9976903873, 9698810699, 7598510114, 9566389092 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் அனைவரும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கல்விக் கடன் தொடர்பான விபரங்களைப் பெற்றுப் பயனடையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருவில்லிபுத்தூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

திருவில்லிபுத்தூர், அக்.10-திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஸ்வரியிடம், கிராம நிர்வாக அலுவலர் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி, சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் வெள்ளிக் கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.வழக்கறிஞர் ராஜேஸ்வரி, வழக்கு தொடர்பாக சிவகாசி வட்டம், வேந்தர்ராஜபுரம் கிராம நிர்வாக அலுவலகத்துக்குச் சென்று கிராம நிர்வாக அலுவலரைச் சந்தித்துப் பேசியபோது, அவர் தரக்குறைவாகப் பேசியதாகத் தகவல் வெளியானது.இதையடுத்து, சம்பந்தப்பட்ட அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வழக்கறிஞர் சங்கத் தலைவர்ராசையா தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.

இளைஞர் மீது இளம்பெண் புகார்

திருவில்லிபுத்தூர், அக்.10-சிவகாசி வட்டம், பள்ளப்பட்டி சாலை முத்தாட்சி மடம் பகுதியில் தாய் மற்றும் அண்ணனுடன் வசித்து வருபவர் அபிதா. குடும்பச் சூழல் காரணமாக, தாயார் வேலை பார்த்து வந்த அச்சகத்தில் அபிதாவும் பணியாற்றி வந்தார். அச்சக உரிமையாளரின் மகன் சரவணனுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நெருக்கமாகப் பழகிய சரவணனை திருமணம் செய்யுமாறு அபிதா கேட்டபோது அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து அபிதா அளித்த புகாரின் பேரில், சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, சம்பவம் நடைபெற்ற பகுதி திருவில்லிபுத்தூர் காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்டது என்பதால் அங்குள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.இதையடுத்து திருவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நகராட்சி அலுவலர்கள் சங்கத்தின் புதிய கிளை அமைப்பு

திருவில்லிபுத்தூர், அக்.10-தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் சங் கத்தின் திருவில்லிபுத்தூர் புதிய கிளை அமைப்புக் கூட் டம், நகராட்சி அலுவலகத் தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் அல்லாஹ் பிச்சை கூட்டத் தைத் தொடங்கி வைத்துப் பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கருப்பையா நிறைவுரையாற்றினார். திருவில்லிபுத்தூர் ஒன்றியச் செயலாளர் பாலமுருகன் வாழ்த்திப் பேசினார்.கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளைத் தலைவராக சுகாதார அலுவலர் கந்தசாமி, செயலாளராக நகரமைப்பு ஆய்வாளர் சுந்தரவள்ளி, பொருளாளராக மின் பணியாளர் சரவணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தொடரும் சுகாதாரச் சீர்கேடு

திருவில்லிபுத்தூர், அக்.10-திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பயன் படுத்தும் ஆண்களுக்கான கழிப்பறை முறையாக பராமரிக்கப்படவில்லைஎன நோயாளிகளும் சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.மருத்துவமனையில் ஆண்கள், பெண் களுக்கு எனத் தனித்தனியாக இரண்டு கழிப்பறைகள் உள்ளன. இதில் ஆண்களுக்கான கழிப்பறையின் அவலநிலை காரணமாக, சிகிச்சை பெற வரும் நோயாளிகள் சுகாதாரப் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நோய்களுக்குச் சிகிச்சை பெற வரும் இடத்தில் சுகாதாரமற்ற சூழல் நிலவுவது வேதனை அளிப்பதாகக் கூறும் அவர்கள், கழிப்பறையை முறையாகப் பராமரித்து, தூய்மையை உறுதிப்படுத்த மருத்துவஎடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.மாவட்ட இணை இயக்குநர் தலைமை மருத்துவராகப் பணியாற்றிய மருத்துவமனையிலேயே இத்தகைய நிலை நிலவுவது குறிப்பிடத்தக்கது.