இராமநாதபுரம் போக்குவரத்துக் கழக சிஐடியு புறநகர் கிளை ஆண்டு பேரவை
9 hours before

இராமநாதபுரம் போக்குவரத்துக் கழக சிஐடியு புறநகர் கிளை ஆண்டு பேரவை

இராமநாதபுரம், ஆக.31–இராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்துக் கழக சிஐடியு புறநகர் கிளையின் ஆண்டு பேரவைக் கூட்டம் கிளைத்தலைவர் எஸ்.போஸ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன மண்டல பொதுச் செயலாளர் வி.பாஸ்கரன் தொடக்க உரையாற்றினார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரெ.குருவேல் வாழ்த்துரையாற்றினார். சிஐடியு மாவட் டத் தலைவர் எம்.சிவாஜி நிறைவுரையாற்றினார்.

புதிய நிர்வாகிகள்

தலைவராக எஸ்.செந் தில்குமார், செயலாளராக எம்.பாஸ்கரன், பொருளாளராக எஸ்.ராம்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்

பராமரிப்புத் துறைக்கு தேவையான பேருந்து உதிரி பாகங்களை உடனடியாக வாங்க வேண்டும்; பராமரிப்புப் பணியாளர் களை நியமிக்க வேண்டும்; கேன்டீன் சுகாதாரத்தை மேம்படுத்தி, தரமான உணவுவழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.