விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் கண்மாயில் 6 அடிக்கும் மேல் சவடு மண் அள்ளுவதா?
5 Oct 2026, 12:38 am

விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் கண்மாயில் 6 அடிக்கும் மேல் சவடு மண் அள்ளுவதா?

இராமநாதபுரம், அக்.4-இராமநாதபுரம் மாவட் டம், திருவாடானை வட்டத் துக்கு உட்பட்ட திருவாடானை–அத்தானி கண் மாய் பகுதிகளில் அரசு அனுமதியுடன் சவடு மண் அள் ளப்பட்டு வரும் நிலையில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆழத்துக்கு மண் அள்ளப்படுவதால் அருகிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற் பட்டுள்ளதாக பொதுமக்களும், விவசாயிகளும் குற் றம்சாட்டியுள்ளனர்.

அரசு விதிமுறைகளின் படி 3 அடி ஆழம் வரை மட் டுமே சவடு மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், சில இடங்களில் 6 அடிக்கும் மேல் பள்ளம் தோண்டி மண்அள்ளப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் கண்மாய் பகுதிகளில் ஆழமான பள்ளங் கள் உருவாகி வருவதுடன், நிலத்தடி நீர்மட்டம் பாதிக் கப்பட வாய்ப்புள்ளதாகவும், அருகிலுள்ள விவசாய நிலங் கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், கண்மாய்க் கரைகள் சேதமடைந்து மழைக்காலத்தில் தண்ணீரை முறையாகத் தேக்குவதில் சிக்கல் ஏற் படும் அபாயம் உள்ளதாகவும் கூறினர்.

சவடு மண் அள்ளும் பணிகள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாகக்கண்காணிக்காமல் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில், திருவாடானை–அத்தானி கண் மாய் பகுதிகளில் நடைபெறும் சவடு மண் அள்ளும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண் டும். விதிமீறலில் ஈடுபடுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.