தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உடைந்த குடிநீர் குழாய் வழியாக சாக்கடை நீர் கலக்கும் அபாயம்

yesterday
உடைந்த குடிநீர் குழாய் வழியாக சாக்கடை நீர் கலக்கும் அபாயம்

உடைந்த குடிநீர் குழாய் வழியாக சாக்கடை நீர் கலக்கும் அபாயம்

நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

இராமநாதபுரம், ஜூன் 22- இராமநாதபுரம் மாவட் டம் திருவாடானை வட்டம் பாரதிநகரில் அமைந்துள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்று நிலை யம் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு, அப் பகுதி மக்களிடையே அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீரேற்று நிலையத்தின் எதிர்புறத்தில் சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் ஓடி வரும் நிலையில், உடைந் துள்ள குடிநீர் குழாயில் இரு ந்து தொடர்ந்து தண்ணீர் கசி ந்து வீணாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும், குடி நீர் விநியோகம் நிறுத்தப் படும் நேரங்களில் குழாயில் ஏற்படும் அழுத்தக் குறைவு காரணமாக, அருகிலுள்ள சாக்கடை நீர் உடைப்பு வழி யாக குழாய்க்குள் புகுந்து கலக்கும் அபாயம் இருப்ப தாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த குடிநீரை நூற்றுக்க ணக்கான குடும்பங்கள் அன் றாட தேவைகளுக்காக பயன் படுத்தி வரும் நிலையில், குடி நீர் மாசடைந்தால் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்று நிலையம் அமைந் துள்ள பகுதியிலேயே இத்த கைய நிலை நீடித்து வருவது பொதுமக்களிடையே அதிரு ப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி யாக ஆய்வு மேற்கொண்டு, உடைந்த குடிநீர் குழாயை அவசர அடிப்படையில் சீர மைக்க வேண்டும். மேலும், குடிநீரின் தரத்தை பரிசோ தித்து மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என சமூக ஆர்வலர்க ளும், அப்பகுதி பொதுமக்க ளும் வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.