தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாலையோர வியாபாரிகளின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி 25 கடைகள் அமைக்க அனுமதி

17 Jun 2026, 9:18 pm
சாலையோர வியாபாரிகளின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி 25 கடைகள் அமைக்க அனுமதி
<p><strong>சாலையோர வியாபாரிகளின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி 25 கடைகள் அமைக்க அனுமதி</strong></p><p>இராமநாதபுரம், ஜூன் 17- சிஐடியு மற்றும் சாலையோர வியாபாரி கள் சங்கம் முன்னெடுத்த தொடர் போராட் டங்களின் விளைவாக, இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் முதற்கட்டமாக 25 கடைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனு மதி வழங்கியுள்ளது. இராமநாதபுரம் பேருந்து நிலையப் பகுதி யில் வியாபாரம் செய்து வந்த சாலையோர வியாபாரிகள் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி முன்னறிவிப்பின்றி அகற்றப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு ஆதர வுடன் இராமநாதபுரம் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கம் மதுரை உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2014- ஆம் ஆண்டுக்கான சாலையோர வியாபாரி கள் பாதுகாப்புச் சட்டத்தை முறையாக அமல் படுத்தாமல், எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வியாபாரிகளை அகற்றியது தவறு எனக் குறிப்பிட்டது. மேலும், அகற்றப்பட்ட வியா பாரிகளுக்கு உரிய இடத்தில் மீண்டும் வியா பாரம் செய்ய வசதி செய்து தர வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த மே 15-ஆம் தேதி மீண்டும் சாலையோர வியாபாரிகளை அகற் றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட தாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜூன் 4-ஆம் தேதி இராமநாதபுரம் நகராட்சி அலுவ லகம் முன்பு சிஐடியு பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அப்போது புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில், நேரில் ஆய்வு மேற்கொண்டு உரிய இடம் ஒதுக்கி தரப்படும் என உறுதியளிக் கப்பட்டது. இருப்பினும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதால், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை யோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா ளர் இரா.முத்துவிஜயன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செவ்வாய்க் கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சமரசக் கூட்டத்தில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழி காட்டுதலின் அடிப்படையில், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் முதற்கட்டமாக 25 கடை கள் அமைத்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் நகராட்சி ஆணையர் நஜிதா பர்வீன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ.சந்தானம், மாவட்டத் தலைவர் எம்.சிவாஜி, சாலையோர வியா பாரிகள் சங்க மாவட்டத் தலைவர் வி. ஆலடி ஈஸ்வரன், துணைத் தலைவர் த.ராமச் சந்திரபாபு, கிளைத் தலைவர் எம்.ஆறுமுக கனி, பொருளாளர் என்.முருகன், நகராட்சி விற்பனைக் குழு உறுப்பினர்கள் பாண்டி, முகமது இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.