சாலையோர வியாபாரிகளை முன் அறிவிப்பின்றி அகற்றுவதா? நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம்
15 Jun 2026, 10:52 pm
<p><strong>சாலையோர வியாபாரிகளை முன் அறிவிப்பின்றி அகற்றுவதா? நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம்</strong></p><p>இராமநாதபுரம், ஜூன் 15- இராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் சாலையோர வியாபாரிகளை முன் அறி விப்பின்றி அகற்றியதைக் கண்டித்து, சிஐ டியு சார்பிலான சாலையோர வியாபாரிகள் சங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு மற்றும் முற்றுகைப் போராட் டத்தில் ஈடுபட்டது. கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி இராமநாத புரம் பேருந்து நிலையப் பகுதிகளில் வியா பாரம் செய்து வந்த சாலையோர வியா பாரிகள் மற்றும் பெண்கள் வியாபாரிகளை நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியதை எதிர்த்து, சிஐடியு இராமநாதபுரம் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டது. இந்த வழக்கில், 2014-ஆம் ஆண்டு சாலை யோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்தாமல், முன் அறி விப்பு இன்றி வியாபாரிகளை அகற்றியது தவறு என நீதிமன்றம் கருத்து தெரிவித்த தாக சங்க நிர்வாகிகள் கூறினர். மேலும், அப்பு றப்படுத்தப்பட்ட வியாபாரிகளுக்கு அவர் கள் முன்பு வியாபாரம் செய்த இடங்களி லேயே மாற்று ஏற்பாடுகளை செய்து வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மே 15 ஆம் தேதி மீண்டும் சாலையோர வியாபாரிகளை முன் அறிவிப்பின்றி அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என வியாபாரிகள் குற்றம்சாட்டி னர். இதையடுத்து, திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலையோர வியா பாரிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட் டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இரா.முத்து விஜயன் தலைமை வகித்தார். போராட்டத்தில் சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ்.ஏ.சந்தானம், மாவட்டத் தலை வர் எம்.சிவாஜி, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவர் வி.ஆலடி ஈஸ்வ ரன், மாவட்ட துணைத் தலைவர் த.ராமச் சந்திரபாபு, கிளைத் தலைவர் எம்.ஆறு முகக்கனி, பொருளாளர் என்.முருகன், சிஐ டியு இராமநாதபுரம் புறநகர் போக்குவரத்து கிளைத் தலைவர் எஸ்.போஸ், நகராட்சி விற்பனைக் குழு உறுப்பினர்கள் பாண்டி, முகமது இப்ராஹிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சாலையோர வியாபாரிகளின் வாழ்வா தாரத்தை பாதுகாக்கவும், நீதிமன்ற உத்த ரவுகளை முழுமையாக அமல்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது.</p>
