தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதிய திட்டத்தை ரத்து செய்து 100 நாள் வேலை வழங்கக் கோரிக்கை விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

16 May 2026, 10:54 pm
புதிய திட்டத்தை ரத்து செய்து 100 நாள் வேலை வழங்கக் கோரிக்கை விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

புதிய திட்டத்தை ரத்து செய்து 100 நாள் வேலை வழங்கக் கோரிக்கை விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

இராமநாதபுரம், மே 16- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத் தூர் வட்டம் மீசல் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. கிராமப்புற விவசாயத் தொழிலா ளர்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங் கிய 100 நாள் வேலைத் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு திடீரென ரத்து செய்து, அதற்குப் பதிலாக “வி.பி.ஜி.-ராம்ஜி” என்ற புதிய திட்டத்தை கடந்த ஏப்ரல் 1 முதல் அமல்படுத்துவதாக அறிவித்துள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

ஆனால் கடந்த ஒரு மாதமாக நாடு முழு வதும் 100 நாள் வேலை திட்டம் முறையாக செயல்படவில்லை என்றும், இதனால் கிராமப்புற தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், கரு விழி படம் பதிவு உள்ளிட்ட புதிய நடைமுறை கள் தொழிலாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினர். எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் முழு மையாக அமல்படுத்த வேண்டும். வி.பி.ஜி.-ராம்ஜி திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு தாலுகா தலைவர் முரு கேசன் தலைமை தாங்கினார். தாலுகா செய லாளர் அங்குதன் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கே.கணேசன் நிறை வுரையாற்றினார். தாலுகா பொருளாளர் பால சுப்பிரமணியன், தாலுகா குழு உறுப்பினர் சோலையன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ப

ழனி அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்கத்தின் சார்பில் தொப்பம்பட்டி யில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எம்.பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே.அருள்செல்வன் கோரிக்கைகளை விளக்கி நிறைவுரையாற்றினார். ஒன்றிய நிர்வாகிகள் பூலான், கிருஷ் ணன், வேலுச்சாமி, பழனிச்சாமி, ஆண்ட வன், திருமூர்த்தி, பாண்டீஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் என்.கனகு, விவசாயி கள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.சின்ன துரை, கார்த்திகேயன், மாதர் சங்க நிர்வாகி கள் கே.பார்வதி, கே.விஜயா, வாலிபர் சங்க நிர்வாகிகள் காளிமுத்து, கே.சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.